கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாலாபத் என்ற ஊரில், 1909ஆம் ஆண்டு, ஜூலை 19 அன்று பாலாமணி பிறந்தார். இவர், இலக்கியத்திற்கு வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகடாமி விருதை பெற்றவர்.
பாலாமணி அம்மா மலையாளத்தில் எழுதிய சொப்பனம், அம்மா, சந்தியா, மழுவிண்டே கதா போன்ற படைப்புகள் மிகவும் பிரபலமானவை. இவரது 113ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் பள்ளி செல்ல முடியாத காலம் என்பதால் வீட்டிலேயே சமஸ்கிருதம் மற்றும் மலையாள மொழிகளை கற்றார். பாலாமணி அம்மாவுக்கு, அவரது மாமா நாலாபத் என்.நாரயணின் எழுத்துக்கள் மூலம் இலக்கியம் மீது ஆர்வம் வந்தது. சிறு வயது முதலே கவிதைகள் எழுதுவதிலும், வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். 1930ஆம் ஆண்டு 'கூப்புக்காய்' என்ற கவிதைத் தொகுப்பை முதலில் வெளியிட்டார்.
பாலாமணியின் எழுத்துத் திறனுக்கு. கொச்சின் மன்னரான பர்க்ஷித் தாம்புரா 'சாகித்ய நிபுணா’ விருது வழங்கினார். பாலாமணி மொத்தம் 20க்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார். அவர் திருமணத்திற்கு பின் கொல்கத்தா சென்றார். அவரின் கணவர் என்.நாராயணின் உதவியுடன் இவர் எழுதிய கவிதை தொகுப்பினை பல மொழிகளில் மொழிப்பெயர்த்தார்.
பாலாமணியின் கவிதைகள் மூலம் மக்கள் இவரை அம்மா எனவும் முத்தசி (பாட்டி) எனவும் பாசத்தோடு அழைத்தனர். கேரள அரசின் சாகித்ய அகடாமி விருது (1963), கேந்திர சாகித்ய அகடாமி விருது (1965), அந்தர்ஜனம் விருது (1993) என பல விருதுகளைப்பெற்றார். மேலும், இந்தியாவின் உயர்ந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் விருதான பத்ம பூஷனையும் பெற்றார்.
கமலாதாஸின் தாயார்: பாலாமணி அம்மா, பிரபல மலையாள கவிஞர் கமலாதாஸின் தாய் ஆவார். அவரது தாயார் போலவே கமலாவும் கவிதை எழுதுவதில் சிறந்து விளங்கினார். இந்நிலையில், கமலாவின் கவிதை தொகுப்புகள் ஆங்கிலத்தில் மிகவும் பிரபலாமனவையாகும். பாலாமணி அம்மா 2004ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அப்போது அவருக்கு வயது 95 ஆகும்.
இதையும் படிங்க: ஆஸ்கர் சாலாவின் 112 ஆவது பிறந்தநாள்- டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்