ETV Bharat / bharat

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு

author img

By

Published : Mar 21, 2022, 11:11 PM IST

கோவா மாநில முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பாஜக தலைமையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேர்வு
தேர்வு

கோவா: உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து நான்கு மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில், பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக‌ 47 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து டேராடூனில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் முதலமைச்சராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் அவர் தோல்வியுற்ற நிலையில், அவரே முதலமைச்சராக தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கோவா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தமுறை பாஜக தனித்து போட்டியிட்டு, 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றிக் கண்டது. இருப்பினும், பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது. தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்ததையடுத்து கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (மார்ச் 21) நடைபெற்றது. அதில், கோவாவின் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், கோவா மாநில முதலமைச்சராக பிரமோத் சாவந்த் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாஜக சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக மணிப்பூர் முதலமைச்சராக நேற்று (மார்ச் 20) அறிவிக்கப்பட்ட பீரேன் சிங் இன்று பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரமோத் சாவந்த், கோவாவின் தற்போதைய முதலமைச்சர் என்பது

இதையும் படிங்க: 'இந்திய அமைப்பை நம்பாத தமிழ்நாடு' - மேகதாது தீர்மானத்திற்கு கர்நாடக முதலமைச்சர் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.