ETV Bharat / bharat

புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது - பிரதமர் மோடி உருக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தாயார் மறைவையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் விரைந்தார். அவரது வருகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

பிரதமர் மோடி உருக்கம்
பிரதமர் மோடி உருக்கம்
author img

By

Published : Dec 30, 2022, 7:55 AM IST

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா இருதய மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று (டிசம்பர் 30) அதிகாலை 3:30 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. என் அம்மாவிடம், ஒரு துறவியின் வாழ்க்கை பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன்.

அவருடைய 100ஆவது பிறந்தநாளில் அவரைச் சந்தித்தபோது, என்னிடம் ஒரு விஷயத்தை சொன்னார். அது எப்போதும் நினைவில் இருக்கும். "புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழுங்கள்" என்றார். அதுபோலவே, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்கிறோம், தூய்மையுடன் வாழ்கிறோம்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தாயார் மறைவையொட்டி அகமதாபாத் விரைந்தார். இவரது வருகைக்காக காந்திநகர் மற்றும் அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் நடந்துவருகின்றன. பாஜக முக்கிய தலைவர்களும், முதலமைச்சர்களும், தொழிலதிபர்களும் ஹீராபென் மோடியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள உள்ளனர்.

இதையும் படிங்க: Heeraben Modi: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.