ETV Bharat / bharat

மாதவிடாய் இருந்ததால் மாணவியை மரம் நடும் நிகழ்ச்சியிலிருந்து விலக்கி வைத்த ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்! - நாஷிக் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்

மாதவிடாய் ஏற்பட்டுள்ள மாணவிகள் மரம் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடாது என ஆசிரியர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Girl student
Girl student
author img

By

Published : Jul 25, 2022, 4:48 PM IST

நாஷிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் அருகே, தேவ்கான் என்ற பகுதியில் உள்ள அரசுப்பெண்கள் ஆசிரமப்பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தேவாரே என்ற ஆசிரியர், மாதவிடாய் ஏற்பட்டுள்ள மாணவிகள் மரம் நடக்கூடாது எனக்கூறியுள்ளார். இதைக் கேட்டு மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து மாதவிடாய் ஏற்பட்டிருந்த ஒரு மாணவியை, நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை எனத்தெரிகிறது.

இதுதொடர்பாக மாணவி கூறுகையில், "எனக்கு மாதவிடாய் காலம் என்பதால், என்னை மரம் நட அனுமதிக்கவில்லை. ஆசிரியர் கூறுவதை மீறி நான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், மதிப்பெண்களைக் குறைத்துவிடுவேன் என மிரட்டினார். ஆசிரமப்பள்ளியில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன" என்று தெரிவித்தார்.

நாட்டில் ஒருபுறம் தொழில்நுட்பமும், நாகரிகமும் வளர்ந்துகொண்டே போனாலும், கிராமப்புறங்களில் பல மூட நம்பிக்கைகள் இன்னும் இருந்து வருகின்றன. மாதவிடாய் குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய ஆசிரியரே, போதிய விழிப்புணர்வு இல்லாமல், மாணவியிடம் இவ்வாறு நடந்துகொண்டது பல தரப்பினர் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க:குளோரோஃபார்ம் கொடுத்து பெண் பாலியல் வன்புணர்வு... போட்டோ எடுத்து மிரட்டிய அரசு ஊழியர்...

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.