பில்வாரா : ராஜஸ்தானில் மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சிறுநீர் கழித்து சக மாணவர்கள் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் லுஹாரியா கிராமத்தை சேர்ந்த மாணவி அருகில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், மதிய உணவு இடைவேளையின் போது தனது தண்ணீர் பாட்டிலை எடுத்து சிறுமி பருக முயன்ற போது அதில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.
மேலும், சிறுமியின் பையில் சக மாணவர்கள் காதல் கடிதம் வைத்திருந்ததாக சிறுமி தெரிவித்து உள்ளார். பின்னர் தண்ணீர் பாட்டிலில் சிறுநீர் கழிக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்ததாக சிறுமி தெரிவித்து உள்ளார். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் சிறுமி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். சிறுமியின் உறவினர்கள் மாணவர்களின் வீட்டில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் லேசான தடியடி நடத்தி சிறுமியின் உறவினர்களை கலைத்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சிறுமி தண்ணீர் பாட்டிலில் சிறுநீர் கழித்து கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் மற்றும் அதை தொடர்ந்து நடைபெற்ற கல்வீச்சு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : Haryana clash: மத ஊர்வலத்தில் வன்முறை.. காவலர் உயிரிழப்பு.. இணைய சேவைகள் முடக்கம்!