ETV Bharat / bharat

'வெற்றிலை பாக்கும் சவைக்க சவைக்க' -  பிடித்தவரிடம் வெற்றிலையை பெற்று கணவரைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள்! - பிகாரில் உள்ள பூரினா கிராமத்தில்

பிகாரில் உள்ள பூரினா கிராமத்தில் ‘பட்ட மேளா’ நிகழ்வில் வெற்றிலை சாப்பிட்டு மாப்பிளையைத் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான திருமண நிகழ்வு கடைபிடிக்கப்படுகிறது.

வெற்றிலை சாப்பிட்டு மாப்பிள்ளைய தேந்தெடுக்கும் சுயம்வரம்!

author img

By

Published : Apr 19, 2022, 3:22 PM IST

பூரினா (பிகார்): பிகாரில் உள்ள பூரினா கிராமத்தில் உள்ள பழங்குடியினர் 100 ஆண்டுகள் பழமையான முறையில் 'பட்ட மேளா’ என்றழைக்கப்படும் வித்தியாசமான முறையில் தங்களது துணையைத் தேர்ந்தெடுக்கும் விநோத முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் மூலம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ளது.

முன்னதாக, இப்பழங்குடியினரின் இளைய சமுதாயத்திற்கு தங்களது வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களின் முந்தைய பழக்கமான 'பட்ட மேளா' மூலம் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிது. மேலும் இதில் பிகார் மட்டுமல்லாது நேபாளம், ஜார்க்கண்ட், வங்காளம் ஆகிய பகுதிகளிலிருந்தும் பழங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்வில் ஒரு இளைஞனுக்கு ஒரு பெண்ணை பிடிக்கும்பட்சத்தில் அவனிடமிருக்கும் 'பான்' எனப்படும் வெற்றிலையை உண்ண அழைப்பான். அந்த பெண் அழைப்பை ஏற்று வெற்றிலையை உண்டால் இருவரும் மனம் ஒத்து ஒற்றுமையாக வாழ்வர். மேலும், பழங்குடியினர் சங்கம் ஒருவரையொருவர் விரும்பிவிட்டு, திருமணம் செய்ய மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கிறது.

இதையும் படிங்க:வருங்கால கணவரை, கண்ணாமூச்சி ஆட அழைத்து கழுத்தறுத்த பெண்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.