ஸ்ரீநகர் : பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானியை கட்டாயமாக அடக்கம் செய்ததாக காவல்துறை மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் காவல்துறை திங்களன்று (செப்.6) கிலானியின் இறுதி சடங்குகள் மற்றும் கஃபான் போர்த்தல் போன்ற சில வீடியோக்களை வெளியிட்டது.
காவல்துறை அறிக்கை
தொடர்ந்து கிலானியின் உடல் அடக்கம் உரிய மரியாதையுடன் மற்றும் அவரது உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றதாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில், கிலானியின் மகன்கள் தங்கள் தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று கூறியதை காவல்துறை மறுத்துள்ளது.
காணொலி வெளியீடு
மேலும், பிரிவினைவாத தலைவரின் இறுதி சடங்குகள் தொடர்பான தொடர் வீடியோக்களை காவலர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
கிலானியின் மரணத்திற்குப் பிறகு, ஐஜிபி காஷ்மீர் விஜய் குமார் மற்றும் எஸ்பி மற்றும் ஏஎஸ்பியுடன் இரவு 11 மணிக்கு கிலானியின் மகன்களை அவர்களது இல்லத்தில் சந்தித்ததாக ட்விட்டரில் காவல்துறை தெரிவித்துள்ளது.
நல்லடக்கம்
அவர்கள் பிரிவினைவாத தலைவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், சட்டம் மற்றும் ஒழுங்கு காரணமாக பொது மக்களின் நலன் கருதி இரவில் அடக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கு இரண்டு மகன்களும் ஒப்புக்கொண்டனர்.
ஐஜிபி காஷ்மீர் தனிப்பட்ட முறையில் ஒரு சில உறவினர்களிடம் பேசி அவர்களை பாதுகாப்பான வழியில் செல்வதை உறுதி செய்தார். இருப்பினும், மூன்று மணி நேரம் கழித்து, பாகிஸ்தானின் தூண்டுதலின்பேரில் தேச விரோத நடவடிக்கைகள் எழுந்துள்ளன.
பாக்., ஆதரவு கோஷங்கள்
கிலானி உடல் மீது பாகிஸ்தான் கொடி போற்றியுள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. போராட்டங்களை தூண்டியுள்ளனர்.
இதற்கிடையில் காவல்துறை வற்புறுத்தலின் பேரில், உறவினர்கள் கிலானி உடலை கல்லறைக்கு கொண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். இது இமான் முன்னிலையில் நடைபெற்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கிலானி உடல் நல்லடக்கம்!