பாட்னா: பிகார் மாநிலம் கயாவில் தம்பதி சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்ததில் கணவன் கண்முன்னே மனைவி உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்துபோலீசார் தரப்பில், கயாவின் மாவ் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராம் குமார்-சங்கீதா தம்பதி. சங்கீதாவுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், கயா நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சை முடிந்த நிலையில், நள்ளிரவில் தனது கணவர் ராம் குமாருடன் காரில் மாவ் கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தார்.
இந்த கார் திகாரி-குர்தா சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, கைலாஷ் மத் கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக கார் திடீரென தீப்பிடிக்க தொடங்கிவிட்டது. இதனிடையே ராம் குமார் கதவை திறந்து வெளியே வந்துவிட்டார். ஆனால், சங்கீதா வெளியே வருவதற்குள் தீ முழுவதும் பரவிட்டதால் அவர் உள்ளேயே சிக்கிக் கொண்டார்.
அதன்பின் ராம் குமார் அக்கம் பக்கத்தினரை அழைத்து தீயை அணைக்க எவ்வளவு முற்பட்டும் பயனில்லாமல்போனது, இதனிடையே எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தீயணைப்புத்துறை அலுவலர்களுடன் சம்பவயிடத்துக்கு விரைந்தோம். ஆனால், அதற்குள் கார் முழுவதும் எரிந்ததில், சங்கீதா உயிரிழந்தார். அதன்பின் உடலை மீட்டோம். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கண்டக்டர் ஃபிட்னஸ் தேர்வில் அதிர்ச்சி சம்பவம் - எடையை அதிகரிக்க உடலில் இரும்பைக் கட்டி வைத்த தேர்வர்கள்