ETV Bharat / bharat

கௌரி லங்கேஷ் கொலை வழக்கு - 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ்

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கௌரி லங்கேஷ்
கௌரி லங்கேஷ்
author img

By

Published : Nov 2, 2021, 4:34 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 17 பேர் மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மராத்தி, கன்னட மொழிகளில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டு

இந்த வழக்கு சனிக்கிழமை (அக்.30) காணொலி மூலம் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு நீதிபதி அனில் பீமன்னா கட்டி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வாசித்தார்.

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை, மும்பை ஆர்தர் சாலை சிறை மற்றும் புனே எரவாடா சிறை ஆகியவற்றிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராகினர். கன்னடம் மற்றும் மராத்தி மொழிகளில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

வழக்கு விசாரணையை டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என சிறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : அதிமுக சார்பில் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.