ஹுப்பளி: ஹூப்பளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது தொடர்பான வழக்கில் அனுமதி அளித்து கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று (ஆக. 30) நள்ளிரவில் தீர்ப்பளித்தது. நள்ளிரவில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து அஞ்சுமன்-இ-இஸ்லாம் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
இதனையடுத்து, இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஒதுக்கப்பட்ட இடத்தில், விநாயகர் சதுர்த்தி விழா வாரியம் சார்பாக விநாயகர் சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஆக. 31) மதியம் 12 மணியளவில் மூருசாவீர மடத்தில் இருந்து விநாயக சிலையை கொண்டு வந்து நிறுவும் நிகழ்ச்சி நடக்க இருந்தது. ஆனால், அஞ்சுமான்-இ-இஸ்லாம் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் காலை 7.30 மணிக்கே விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டது.
உத்சவ் சமிதி அமைப்பின் தலைவர் சஞ்சீவ் படேஸ்கர் தலைமையில் கணபதி சிலை நிறுவப்பட்டது. மாநகராட்சி உறுப்பினர் குழுத் தலைவர் சந்தோஷ் சகான் உடன் பல இந்து தலைவர்கள் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்டனர். இரு தரப்பினருக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஹுப்பள்ளி இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி - நள்ளிரவில் நீதிமன்றம் உத்தரவு