ETV Bharat / bharat

டெல்லியில் தொடரும் போராட்டம்... சிங்கு எல்லையில் வீடு கட்டும் விவசாயி!

சிங்கு எல்லையில், விவசாயி ஒருவர் செங்கல், சிமெண்ட் உபயோகித்து வீடு கட்டும் காணொலி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

author img

By

Published : Mar 10, 2021, 6:12 PM IST

Singhu
சிங்கு

டெல்லி: வேளாண் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 100 நாள்களாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்துள்ளது.

திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் டிராக்டர்களை வீடுகளாக மாற்றித் தங்கிச் சமைத்துச் சாப்பிட்டுப் போராடி வரும் விவசாயிகள், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை வீடு திரும்பப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். கடுங்குளிர், மழை, வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சிங்கு எல்லையில் வீடு கட்டும் விவசாயி

ஆனால், இனி உள்ள காலங்கள் கோடைக் காலம் என்பதால் அதிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்துக்கொள்ள ஹரியானாவில் உள்ள சோனிபாட்டைச் சேர்ந்த இளம் விவசாயிகள் குழு ஏர் கண்டிஷனிங் டிராலி டிராக்டரை உருவாக்கியுள்ளனர். இதில், குளிர்சாதனப் பெட்டி, எல்.இ.டி தொலைக்காட்சி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட பிற வசதிகள் உள்ளன.

இந்நிலையில், டெல்லி சிங்கு எல்லையில், தீப் காத்ரி என்ற விவசாயி, வீடு கட்டும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். செங்கல், சிமெண்ட்டைப் பயன்படுத்தி கட்டுமானத்தின் அஸ்திவாரப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எல்லையில் விவசாயி வீடு கட்டும் காணொலி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. ஏசி வசதியுடன் வீட்டை அமைத்திட விவசாயி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிது. இந்த நடவடிக்கை விவசாயிகளின் உறுதியான நோக்கத்தைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

இதையும் படிங்க: உழவர்களின் முதலமைச்சரா இபிஎஸ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.