ETV Bharat / bharat

AlT News இணை நிறுவனர் முகமது ஜூபைர் கைதின் முழுப்பின்னணி! - மத நம்பிக்கைகளை அவமதித்தல்

Fact checker என்ற பெயரில் போலி செய்திகளை ஆதாரத்துடன் தவறு என நிரூபிக்க முயற்சித்து வந்த AlT News இணை நிறுவனர் முகமது ஜூபைரை டெல்லி போலீசார் மத உணர்வுகளை சீர்குலைத்ததாக கைது செய்துள்ளனர். அதன் முழுப்பின்னணி...

Rahul gandhi condems zubair arrest
முகமது ஜூபைர் கைதுக்கு ராகுல் காந்தி கண்டனம்
author img

By

Published : Jun 28, 2022, 5:51 PM IST

இன்ஜினியரான முகமது ஜுபைர் Alt Newsஇன் இணை நிறுவனர்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், இணையத்தில் உலாவும் போலி தகவல்களை ஆதாரங்களுடன் தவறு என்று ஜூபைர் பகிர்ந்து வந்தார்.

ஒரு சில தருணங்களில் ஜூபைர் வெளியிட்ட பதிவுகளும் தவறானவை என விமர்சனம் எழுந்தது. கியான்வாபி மசூதி விவகாரத்தின் போது , ஜூபைர் வாடிகன் சிட்டியும் சிவலிங்கத்தின் வடிவத்தில் உள்ளது, வாதிகா தான் வாடிகனாக மாறியதா என சர்ச்சையாகப் பதிவிட்டு இருந்தார்.

ஜூபைரின் சர்ச்சை பதிவு
ஜூபைரின் சர்ச்சை பதிவு

மேலும் நூபுர் சர்மா முகமது நபிகள் குறித்துப் பேசியபோது, அவருக்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் கண்டன குரல்களை எழுப்பினர். அப்போது நூபுர் சர்மா தனது உயிருக்கு அச்சறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஜூபைர் சிலரைத் தூண்டிவிடுவதாக ட்வீட் செய்திருந்தார்.

  • :@DelhiPolice @CPDelhi I am getting continuous death and beheading threats against my family and myself which are egged on by @zoo_bear because of his attempts to incite communal passions and vitiate the atmosphere by building a fake narrative.

    Attaching a few pics. Please note. pic.twitter.com/QmgA2uRCrS

    — Nupur Sharma (@NupurSharmaBJP) May 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில் ஜூபைர் கடந்த 2020ஆம் ஆண்டு பதிவு செய்த ட்வீட் தொடர்பாக வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வருமாறு டெல்லி காவல் துறையின் தனிப்பிரிவினர் அழைத்தனர். விசாரணைக்கு ஆஜரான அவரை மற்றொரு வழக்கில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜுபைர் மீது இந்திய தண்டனைச சட்டம் 153A (மதம், இனம் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295A (மத நம்பிக்கைகளை அவமதித்தல்) உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • Present case registered on basis of a post on Twitter by handle Hanuman Bhakt @ balajikijaiin where he showed his anger against another Twitter handle in name of Mohammed Zubair regarding the post “BEFORE 2014: Honeymoon Hotel. After 2014: Hanuman Hotel”:Delhi police sr officials

    — ANI (@ANI) June 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

டெல்லி காவல் துறையின் துணை ஆணையாளர் மல்ஹோத்ராவிடம் ஜுபைர் மீதான கைது நடவடிக்கை பற்றி கூறுகையில் வழக்கு ஒன்றில் உரிய ஆதாரங்கள் இருப்பதால், முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சிறையில் அடைக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

கடந்த 2018ஆம் ஆண்டில், ஜூபைர் 1983இல் வெளியான ஒரு திரைப்படத்தின் காட்சியைக் குறிப்பிட்டு இது 2014க்கு முன் ஹனிமூன் ஹோட்டல், 2014க்கு பின் இது ஹனுமன் ஹோட்டல் எனப் பதிவிட்டு இருந்தார். 4 ஆண்டுகளுக்கு முன் ஜுபைர் பதிவிட்டு இருந்த இந்த ட்வீட் தொடர்பாக தான் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காவல் துறையின் நடவடிக்கைக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். உண்மையின் ஒரு குரலைக் கைது செய்வது இன்னும் ஆயிரம் பேரை மட்டுமே எழுப்பும் எனக் கூறியுள்ளார்.

  • Every person exposing BJP's hate, bigotry and lies is a threat to them.

    Arresting one voice of truth will only give rise to a thousand more.

    Truth ALWAYS triumphs over tyranny. #DaroMat pic.twitter.com/hIUuxfvq6s

    — Rahul Gandhi (@RahulGandhi) June 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சசி தரூர், ஊடகவியலாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே I SUPPORT ZUBAIR என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதையும் படிங்க: கர்நாடகா காவல்நிலையத்தில் கலவரம் செய்த எலி- பூனையை வளர்த்த புத்திசாலி காவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.