சென்னை:பெட்ரோல் விலை 12 வது நாளாக 90 ரூபாயை கடந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டீசல் விலையும் அதிகரித்து வருகிறது.
இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்களுக்கு மீதி சில்லறை கொடுப்பதிலும் சிக்கல் எழுவதாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் 39 பைசா அதிகரித்து 90 ரூபாய் 58 பைசாவுக்கு விற்கப்படுகிறது. டீசல் 37 பைசா உயர்ந்து 80 ரூபாய் 97 பைசாவுக்கு விற்பனையாகிறது.
சென்னையில், இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரூபாய் 59 பைசாவுக்கும், டீசல் 85 ரூபாய் 98 பைசாவுக்கும் விற்கப்படுகிறது.