மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட்டில் நேற்றிரவு (நவம்பர் 7) ஆட்டோ மீது மணல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ராய்காட் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், மகாராஷ்டிராவின் காசெடியில் இருந்து 3 மாணவர்கள் ஆட்டோ பிடித்து ராய்காட் நோக்கு புறப்பட்டுள்ளனர்.
அப்போது ராய்கர் அருகே கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி இந்த ஆட்டோ மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஓட்டுநருடன் மாணவர்களும் உயிரிழந்தனர். மாணவர்களின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வீடியோ: இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் அடி உதை