ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டம் பாக்மாராவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நள்ளிரவில் திருடர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையிர் மீது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் 4 நிலக்கரி திருடர்கள் சுட்டுக்கொல்லப்பட்டர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து, உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை ராஞ்சியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாக்மாரா போலீசார் தரப்பில், நிலக்கரி சுரங்கத்தில் திருட முயன்றவர்களை சிஐஎஸ்எஃப் அலுவலர்கள் முதலில் தடுக்க முயன்றனர். ஆனால் திருடர்கள் தாக்குதல் நடத்தவே, பதிலடிகொடுக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. சம்பவயிடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மங்களூரு குண்டுவெடிப்பு... எனது மகன் அப்பாவி, ஆதார் அட்டையை தொலைத்து 6 மாசமாகிறது... பெற்றோர் வாக்குமூலம்...