ஹோலியின் முதல் நாள் ஹோலிகா தஹான் என அழைக்கப்படுகிறது. இந்நாளில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நெருப்பு எரியூட்டப்பட்டுக் கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை கரோனா காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வலியுறுத்தப்படுள்ளது.
அதன்படி, டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பிகார், ஜார்கண்ட், கோவா, உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஹோலிகா தஹான் கொண்டாட்டத்தின்போது, பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில் நான்கு குழந்தைகள் தீ விபத்தில் சிக்கியுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் வைக்கோலில் நெருப்பு பற்றவைத்து விளையாடியுள்ளன.
அப்போது எதிர்பாராதவிதமாக எரியூட்டப்பட்ட வைக்கோல், அருகிலிருந்த வைக்கோல் புதர் மீது விழவே, பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த ஊர் மக்கள் அக்குழந்தைகளை உடனடியாக மீட்டுள்ளனர். ஆனால் அதற்குள்ளாகவே தீயில் கருகி மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், உயிருக்குப் போராடிய நிலையில் ஒரு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க:அதிமுக வளர்மதியை தகுதி நீக்கம்செய்ய சத்யபிரத சாகுவிடம் மநீம வேட்பாளர் புகார்