முன்னாள் ராஜஸ்தான் ஆளுநராக இருந்த கல்யான் சிங், ஜூலை 4ஆம் தேதி தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலை குறித்து பிரதமர் மோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அவருக்கு அனைத்து விதமான மருத்துவ உதவியும் செய்துத் தரப்படும் என அவர் குடும்பத்தினரிடம் உறுதியளித்தார்.
இந்நிலையில், கல்யான் சிங் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சஞ்சய் காந்தி மருத்துவமனை இயக்குனர் ஆர்.கே. திமான் தெரிவித்துள்ளார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
89 வயதான கல்யான் சிங் உத்தரப் பிரதசேத்தின் முதல் பாஜக முதலமைச்சர் ஆவார். இவரது பதவிக்காலத்தில்தான் ஆயோத்தி பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடைபெற்றது.
இதையும் படிங்க: ஐந்தே நாளில் எடியூரப்பா ராஜினாமா?