முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (அக்.13) மாலை அனுமதிக்கப்பட்டர். இதய நோய் சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக அவதிப்பட்டுவந்ததாகவும், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 89 வயதான மன்மோகன் சிங், 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்தார்.
அதற்கு முன்னதாக நரசிம்ம ராவ் தலைமையிலான அரசியில் நிதியமைச்சராக பதவிவகித்தார். இவர் நிதியமைச்சராக இருந்த 1991ஆம் ஆண்டில்தான் நாட்டின் பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: 'சாவர்கர் மன்னிப்பு விவகாரம்' விவாதப்பொருளாக மாறியுள்ள ராஜ்நாத் சிங் கருத்து