ஹைதராபாத் : ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் கடும் காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமப்பட்டார்.
இதையடுத்து அவர் குருகிராமில் உள்ள மேதாந்தா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.
முன்னதாக ஜூன் மாதம் கமல்நாத் இதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போதும் அவருக்கு சுவாசிப்பதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில் சில வாரங்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
இதையும் படிங்க : 'கமல்நாத் அரசை கவிழ்த்ததில் பிரதமரின் பங்கு முக்கியமானது' - பாஜக தேசிய செயலாளர்