ETV Bharat / bharat

"எனது குடும்பமும், காங்கிரசாரும் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்" - உம்மன் சாண்டி விளக்கம்! - உம்மன் சாண்டியின் சகோதரர் அலெக்ஸ் சாண்டி

காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன் சாண்டிக்கு குடும்பத்தினர் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என அவரது சகோதரர் அலெக்ஸ் சாண்டி குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதனை உம்மன் சாண்டி மறுத்துள்ளார். தனது குடும்பத்தினரும் காங்கிரஸ் கட்சியினரும் தன்னை நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Former
Former
author img

By

Published : Feb 7, 2023, 1:26 PM IST

கோட்டயம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டிக்கு(79) நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், நேற்று(பிப்.6) மாலை உம்மன் சாண்டிக்கு திடீரென உடல்நிலை மோசமானதால் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், உம்மன் சாண்டியின் சகோதரர் அலெக்ஸ் சாண்டி, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அலெக்ஸ் சாண்டி செய்தியாளர்களிடம் பேசியபோது, "உம்மன் சாண்டியின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அவருக்கு உடல்நல பாதிப்புகள் இருக்கின்றன. ஆனால், அவரது மனைவி, மகள், மகன் ஆகியோர் அவருக்கு நவீன மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. அவர் அமெரிக்கா சென்றபோதும், அங்கும் அவர்கள் நவீன மருந்துகளை எடுக்க அனுமதி அளிக்கவில்லை. ஆயுர்வேத மருந்துகளை மட்டுமே கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கடந்த 15 நாட்களாக அவருக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.

உம்மன் சாண்டிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமெனக் கோரி முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை மருத்துவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார். அலெக்ஸ் சாண்டியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து உம்மன் சாண்டி மற்றும் அவரது மகன் சாண்டி உம்மன் இருவரும் முகநூல் நேரலையில் வந்து விளக்கமளித்தனர். தனக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என வெளியான செய்தி தவறானது என்றும், தனக்கு அதனால் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் உம்மன் சாண்டி தெரிவித்தார். தனது குடும்பத்தினரும், காங்கிரஸ் கட்சியினரும் தன்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உம்மன் சாண்டியை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேரில் சந்தித்து நலன் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீணா ஜார்ஜ், உம்மன் சாண்டி சிகிச்சைக்காக மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: Erode east by Poll: அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றிக்கு அயராது உழைப்போம்: அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.