விழுப்புரம்: புதுச்சேரியில் பாஜக, அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரசுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதன் தலைவர் என். ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளராக முடிவு செய்யப்பட்டுள்ளார்.
அதனால் நேற்று (மார்ச்10) இரவு விழுப்புரம் மாவட்டம் சித்தணியில் உள்ள அவரது குலதெய்வமான பூரணி, பொற்கலை சமேத அய்யனாரப்பன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். அங்குள்ள வீரபத்திரன் சாமியை வழிபட்டு கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு தன் கைகளால் பிரசாதம் வழங்கினார். பின்னர் அங்கிருந்து புதுச்சேரி புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: வருவாய்ப் பற்றாக்குறை மானியம் என்றால் என்ன? அதில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்கு எவ்வளவு?