ஜெய்ப்பூர்: இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்து, ஜெய்ப்பூரில் உள்ள அமர் கோட்டைக்குச் சென்று கோட்டையை பார்வையிட்டார். ஜெய்ப்பூரில் உள்ள அமர் கோட்டையில் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சங்கமத்தைக் கண்டு, போரிஸ் ஜான்சன் ஆச்சரியம் அடைந்தார்.
பின்னர் கோட்டையிலிருந்து, ஏறக்குறைய 1.30 மணி நேரம் நடந்தே சென்று ஜெய்காத் கோட்டையைப் பார்வையிட்டார். அப்போது, காவல்துறையினருடனும் சுற்றுலாப் பயணிகளுடனும் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் பிரதமராகவும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் 2019 முதல் 2022 வரை பதவி வகித்தவர். முன்னாள் பிரதமர் எலிசபெத் ட்ரஸ் பதவியேற்ற 45 நாட்களுக்குள் ராஜினாமா செய்ததை அடுத்து, போரிஸ் ஜான்சன் சமீபத்தில் இங்கிலாந்து தேர்தலில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டார். இதன் பின் ரிஷி சுனக் பிரட்டனின் பிரதமராக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 100-வது நாளை தொட்ட இந்திய ஒற்றுமை யாத்திரை: ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு