டெல்லி: கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக பாஜக உறுப்பினரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் பொதுநல மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹிமா கோஹ்லி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கட்டாய மத மாற்றம் மிகத் தீவிரமான பிரச்சனை, இந்த நிலைமை மோசமடைவதற்கு முன்பு அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பட்டியலிடுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் அமர்வு கேட்டுக் கொண்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பள்ளி நிர்வாகம் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு இந்த மனுவை அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக என்ஐஏ, சிபிஐ மூலம் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதில் கட்டாய மதமாற்றத்தை கையாள்வதற்கான மசோதாவை கொண்டுவரவும் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: குழம்பில் கரப்பான் பூச்சி: டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் விசாரணை