ETV Bharat / bharat

‘கரோனா இல்லாத 2022ஆம் ஆண்டிற்காக கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்’- மருத்துவர் ரெட்டி - ஈடிவி பாரத்

கரோனாவின் இரண்டாவது அலைக்கு எதிரான போரில் தேசம் வெற்றி பெற வேண்டுமென்றால், காலங்காலமாய் நடைமுறையில் இருக்கும் பொதுச் சுகாதார நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டும். அவைதான் கரோனா தீநுண்மியின் இரட்டை உருமாற்றம் கொண்ட வடிவங்கள் உட்பட எந்தவொரு புதிய வகையறாவையும் பரவாமல் கட்டுப்படுத்தும் வன்மை கொண்டவை என்று ஈடிவி பாரத் துணைச் செய்தி ஆசிரியர் கிருஷ்ணானந்த் திரிபாதிக்குக் கொடுத்த சிறப்பு நேர்காணலில் மருத்துவர் கே. சிரிநாத் ரெட்டி கூறியிருக்கிறார். மருத்துவர் ரெட்டி குறிப்பிடத்தக்க பொதுச் சுகாதார நிபுணர், மற்றும் பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் தலைவரும் ஆவார்.

மருத்துவர் ரெட்டி
மருத்துவர் ரெட்டி
author img

By

Published : Apr 18, 2021, 4:59 AM IST

நியூ டில்லி: முகக்கவசம் அணிதல், கைக்கழுவுதல், சமூக இடைவெளி பேணுதல், திருமணம் மற்றும் பெரிய கூட்டங்கூடும் பெரும் நோய்க்கடத்தி நிகழ்வுகளை நிறுத்தி வைத்தல் ஆகியவை காலத்தால் பரிசோதிக்கப்பட்ட பொதுச் சுகாதார நடவடிக்கைகள். கரோனாவை பற்றிய அச்சம் ஏதுமின்றி 2022-ஆம் ஆண்டை நாம் தொடங்க வேண்டும் என்றால் இந்த நடவடிக்கைகளை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடத்தக்க பொதுச் சுகாதார வல்லுநர் ஒருவர் கூறியிருக்கிறார்.

ஈடிவி பாரத்திற்குக் கொடுத்த ஒரு சிறப்பு நேர்காணலில் குறிப்பிடத்தக்க பொதுச் சுகாதார நிபுணர், மற்றும் பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் தலைவரும் ஆன மருத்துவர் கே சிரிநாத் ரெட்டி சொன்னது இதுதான்: கரோனா இரண்டாவது அலைக்கு எதிரான போரில் நமது தேசம் வெற்றி பெற வேண்டுமென்றால், காலங்காலமாய் நடைமுறையில் இருக்கும் பொதுச் சுகாதார நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டும். அவைதான் கரோனா என்னும் தீநுண்மியின் இரட்டை உருமாற்றம் கொண்ட வடிவங்கள் உட்பட எந்தவொரு புதிய வகையறாவையும் பரவாமல் கட்டுப்படுத்தும் வன்மையும், ஆற்றலும் கொண்டவை.

”தடுப்பூசியை மட்டுமே சார்ந்திருக்காதீர்கள். தடுப்பூசி மட்டும் போட்டுக் கொண்டு, பெரும் நோய்க்கடத்தி நிகழ்வுகளில் முகக்கவசம் அணியாமல் கலந்து கொண்டு சதாச் சுற்றிக் கொண்டே இருந்தால், இன்னும் ஒரு வருடத்திற்குப் பிரச்சினையில் இருந்து உங்களால் வெளிவராமல் போய்விடக் கூடும்,” என்றார் மருத்துவர் ரெட்டி.

“நமது சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டான 2022-ஐ வைரஸ் அச்சமின்றி நாம் ஆரம்பிக்க வேண்டும். அது சாத்தியப்பட வேண்டுமென்றால், இந்த 2021-ல் நாம் கட்டுப்பாட்டோடு, அடக்கி வாசித்து வாழ்ந்தாக வேண்டும், பொதுச் சுகாதார நடவடிக்கைகளோடும், தடுப்புமருந்து போட்டுக் கொள்ளும் முனைப்போடும்,” என்று மருத்துவர் சிரிநாத் ரெட்டி மேலும் விளக்கினார்.

”தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். அதே சமயம், கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் நாம் பேணியாக வேண்டும். எத்தனைப் பேருக்குத் தடுப்புமருந்து கொடுக்கிறோம் என்பது மருந்து எந்த அளவில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்தது. குறிப்பாக 35 வயதுக்கு மேம்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்புமருந்து ஆகஸ்டு 15-ஆம் தேதிக்குள் கொடுக்கப்பட்டு விடும் என்று நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.

கரோனாவின் இரண்டாம் அலையை கொண்டு வந்தது எது?

சமீப வாரங்களில் தேசத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மருத்துவ உட்கட்டமைப்பைத் திணறடித்துக் கொண்டிருக்கும் கரோனா தீநுண்மியின் இரண்டாம் அலையைப் பற்றிப் பேசும்போது, வருட ஆரம்பத்தில் தொற்று எண்ணிக்கை குறைவாக இருந்த போது நாம் கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் வென்று விட்டோம் என்று மிதப்பில் இருந்தது பெரும் தவறு என்று மருத்துவர் ரெட்டி கூறினார்.

“தினப்படியான மரண விகிதத்திலும், தொற்று எண்ணிக்கையிலும், பரிசோதனை பாஸிட்டிவ் விகிதத்திலும் வீழ்ச்சி ஏற்படத் தொடங்கியவுடன் இந்த வருட ஆரம்பத்தில், அதாவது ஜனவரியில் நாம் ரொம்பவே அலட்சியமாக இருக்கத் தொடங்கி விட்டோம். ஒருவழியாக உலகத்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக நாம் தப்புக் கணக்குப் போட்டு விட்டோம்,” என்றார் அவர்.

எந்தவொரு ஆபத்தான வைரஸ் என்றாலும் அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இந்தியர்களின் மரபணுக்களில் இயல்பாகவே உண்டு என்று நம்பிக்கொண்டு, ஒட்டுமொத்தக் கூட்ட நோய்எதிர்ப்புச் சக்தியைப் பற்றிச் சிலர் பேசத் தொடங்கியவுடன் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்ற நம்பிக்கை ஊரெங்கும் சுற்றிவர ஆரம்பித்தது.

ஊரடங்கு முதல் அலையைக் கட்டுப்படுத்தியது

கரோனாவின் முதல் அலையின் போது, நீண்டகால ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடுகள் கொண்ட பலவிதமான தளர்வுகள் ஆகியவை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் தொற்று எண்ணிக்கைகளைப் பெருமளவில் குறைத்தன.

“தீபாவளியின் போதுகூட, பெரிய கூட்டங்கள் தெருக்களில் இல்லை. இந்தக் கட்டுப்பாட்டு ஒழுங்குணர்வு, எப்போது நாம் முந்திரிக் கொட்டைத்தனமாக வைரஸ்க்கு எதிராக வெற்றி பெற்று விட்டோம் என்று அறிவித்தோமோ, அப்போதே மறைந்துவிட்டது,” என்று மருத்துவர் சிரிநாத் ரெட்டி ஈடிவியிடம் தெரிவித்தார்.

”இனி நாம் பெரிய திருமண விழாக்கள் நடத்தலாம். பிறந்தநாள் விழாக்கள் நடத்தலாம்; சட்டசபை, உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தலாம் என்றெல்லாம் மக்கள் நினைக்க ஆரம்பித்தார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு பயணங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. அவற்றின் ஒட்டுமொத்த விளைவாகத்தான் புதிய வைரஸ் வகையறாக்கள் பறந்து நம்மிடம் வந்து சேர்ந்தன,” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

புதிய வைரஸ் வடிவத்தை வெளிப்படுத்துவதில் இங்கிலாந்து செய்த தாமதம்

புதிய வைரஸ் வடிவத்தை உலகத்திற்கு வெளிப்படுத்துவதை பலமாதங்களாக இங்கிலாந்து அரசு தள்ளி வைத்தது என்று மருத்துவர் ரெட்டி இங்கிலாந்திற்கு எதிராகக் குற்றஞ்சாட்டினார்.

“வைரஸின் இங்கிலாந்து வகையறா அவர்களுக்கு செப்டம்பரிலே தெரிந்துவிட்டது. ஆனால் அதை அவர்கள் டிசம்பர் மாதத்தில்தான் தெரிவித்தார்கள். அதற்குப் பின்புதான் நாம் மரபணு வரிசைப்படுத்தலுக்கான இந்தியா கூட்டமைப்பை உருவாக்கி அதைத் தேட ஆரம்பித்தோம். அது கணிசமான எண்ணிக்கையில் காணப்பட்டது. அதனால் நாம் அரசின் பயணக் கொள்கையை மட்டுமே குறை சொல்வது சரியாக இருக்காது,” என்றார் அவர்.

படுவேகமான கரோனா தொற்று

தொற்று விகிதத்தில் கரோனாவின் இங்கிலாந்து வகையறா 60 சதவீதம் அதிவேகமானது. ஏனென்றால் அதில் ஸ்பைக் புரோட்டீன் உருமாற்றங்கள் உள்ளன.

“இந்தப் புரோட்டீன்கள் என்னும் கருவிகள் மூலமாகத்தான் ஒரு வைரஸ் மனித உடல் செல்லுக்குக் கதவைத் திறந்து உள்நுழைகிறது. அங்கே எஸ்2 என்றழைக்கப்படும் ரிசப்டார் இருக்கிறது. ஸ்பைக் புரோட்டீன் தன்னை அந்த ரிசப்டாரோடு இணைத்துக் கொள்கிறது. பின்பு அது கதவைப் போன்று ரிசப்டாரைத் திருகிக் கதவைத் திறந்து செல்லுக்குள் செல்கிறது. செல்லுக்குள் நுழைந்த ஸ்பைக் புரோட்டீன் செல்லின் மரபணுக் கட்டமைப்பை தன்பிடிக்குள் கொண்டுவந்து மேலும் மேலும் தான்பெருகி தனது சொந்த வடிவங்களை உண்டாக்கிக் கொள்கிறது,” என்று மருத்துவர் சிரிநாத் ரெட்டி விஞ்ஞானப் பூர்வமாக விளக்கினார்.

“இந்தக் குறிப்பிட்ட உருமாறியும், மற்ற உருமாறிகளும் புதிய ஸ்பைக் புரோட்டீன் உருமாற்றங்களைப் பயன்படுத்தி ரிசப்டாரைக் கட்டிவைத்திருக்கும் தளங்களில் ஒட்டிக் கொள்கின்றன. அதனால் அவற்றை எளிதாக அகற்றிவிட முடியாது. அல்லது அவை மனித உடல் செல்லை எளிதாகத் திறந்து நுழைந்து விடமுடியும். இந்தக் குணாதிசயத்தினால்தான் அவற்றின் தொற்று விகிதம் அதிகமாகிறதே ஒழிய அவை வேகமாகப் பயணிப்பதால் அல்ல,” என்று மேலும் அவர் விளக்கம் கொடுத்தார்.

சரியான சாம்பிள் இன்மை

சரியான சாம்பிள்கள் எடுப்பது பற்றிப் பேசும்போது, நல்ல பரிசோதனைக்கூடச் சூழலில் செய்யப்படும்போது ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கூட 60-70 சதவீத பாஸிட்டிவ் விகிதத்தை மட்டுமே காட்டுகிறது, துல்லியம் என்ற கோணத்தில் பார்க்கும்போது.

“எச்சில், சளி துணிச் சேகரிப்பு மிகவும் முக்கியமானது. ஒரு பரிசோதனையில் நாம் பார்ப்பது என்னவென்றால் வைரஸ் என்பது பரிசோதனைக் கூடத்தில் எப்படி பெருகுகிறது என்பதைத்தான். எச்சில், சளி துணி சாம்பிள் சரியாகக் கொண்டு சேர்க்கப்படவில்லை என்றால் அல்லது பரிசோதனைக் கூடத்தில் அது சரியாகப் பாதுகாக்கப் படவில்லை என்றால், நிறைய தவறுகள் ஏற்பட்டு விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் பொய்யான நெகட்டிவ் ரிசல்ட் கூட வரலாம். அதனால்தான் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை ஒரு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை செய்ய வேண்டும்,” என்று அவர் மேலும் விளக்கினார்.

தரைத் தளத்தில் வைரஸ் பரவுதல்

தரைத் தளங்களில் கூட நம்மால் வைரஸைக் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக உறைந்த உணவுகளில் வைரஸ் நீண்ட நேரம் ஜீவித்திருக்கும். ஆனால் அது தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளாது. அதனால் தரைத்தளம் வழி வைரஸ் பரவும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றார் மருத்துவர் ரெட்டி.

துளிகள், காற்றில் மிதக்கும் திரவத்துளிகள் ஆகியவை வைரஸ் பரவுதலின் முக்கியமான வழிமுறைகள் ஆகும். ஆனால் தரைத்தளம் வழிப் பரவுதல் என்பது முக்கியமான தொற்றுமுறையாகத் தோன்றவில்லை என்பதை நிஜமான பரிசோதனைகள் நிரூபித்திருக்கின்றன என்றார் அவர்.

தடுப்புமருந்து ஊட்டுதலின் போக்கு

என்னதான் தடைகள் இருந்தாலும், 35 வயதிற்கு மேம்பட்ட எல்லா மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்குத் தேசம் ஆகச்சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் ரெட்டி சொன்னார். ஆனால் இந்த இரண்டாவது அலை கரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் தொகையில் எந்தப் பகுதியினருக்குத் தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும் என்பதைக் கணிக்க அவர் மறுத்துவிட்டார்.

இந்தியாவிலும், உலக நாடுகளிலும் இருக்கும் வல்லுநர்கள் ஏதோ சில வழிகளில் பெரும்பாலும் தவறான கணிப்புகளையே செய்திருக்கிறார்கள் என்று சொன்ன மருத்துவர் ரெட்டி, இந்தியாவில் நிலவும் பலவிதமான நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள அவர்கள் தவறி விட்டார்கள் என்றும் கூறினார்.

காலம் பரிசோதித்த வழிமுறையே இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தும்

முகக்கவசம் அணிதல், கைக்கழுவுதல், திருமணம் மற்றும் பெரிய கூட்டம்கூடும் பெரும் நோய்க்கடத்தி நிகழ்வுகளை நிறுத்தி வைத்தல் போன்ற சமூக இடைவெளி பேணும் பழைய வழிமுறையைப் பயன்படுத்தி தேசம் கரோனா வைரஸின் இரண்டாவது அலையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று பொதுச் சுகாதார நிபுணர் கூறினார்.

”வைரஸ்க்கு கடந்து போவதற்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். மென்மையான நெடுஞ்சாலையைக் கொடுத்தால், அது வேகமாக பயணித்து சென்று விடும். மாறாக, மேடுபள்ளமான சாலையைத் தந்தால், அது கீழே விழுந்து தேங்கிப் பரவ ஆரம்பிக்கும்,” என்று மருத்துவர் ரெட்டி தெளிவாக ஈடிவியிடம் சொன்னார். “அது அசலான வைரஸா அல்லது இங்கிலாந்து வகையறாவா அல்லது வேறு ஏதோ உருமாறிய அல்லது இரட்டை உருமாற்றம் கொண்ட வைரஸா என்பது முக்கியமல்ல,” என்று கருத்து சொன்னார் அவர். கரோனா வைரஸ் கண்கள் வழியாகவும் பரவுகிறது என்பதால் மக்கள் காப்புக் கண்ணாடி அணிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அரசியல் தலைவர் முதல் சாமான்ய மனிதன் வரை எல்லோரும் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளாவிட்டால், இந்த வைரஸ் மேலும் பரவத்தான் போகிறது. இன்னும் அது இரண்டு அல்லது நான்கு அல்லது ஆறு மாதங்களில் கடந்து போய்விடும் என்பதெல்லாம் அர்த்தமற்ற பேச்சாகி விடும், கட்டுப்பாடான வழிமுறையை நாம் கடைப்பிடிக்காவிட்டால்.

ஒற்றை டோஸ் எவ்வளவு பலன் தரக்கூடியது?

கரோனா தடுப்புமருந்தின் முதல் டோஸைப் பெற்றபின்பும் பெரும்பாலான மக்களை கரோனா வைரஸ் தாக்குகிறது என்ற செய்திகளைப் பற்றிப் பேசிய மருத்துவர் ரெட்டி, ஒற்றை டோஸ் என்பது பல்வேறு காரணிகளைச் சார்ந்திருக்கிறது என்பதால் ஒற்றை டோஸை ஒருவர் பெற்றபின்பு அவரது நோய் எதிர்ப்புச் சக்தியின் நிலை எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம் என்று சொன்னார்.

இரண்டாவது டோஸ் எடுத்து 14 நாட்களுக்குப் பின்பு வைரஸ்க்கு எதிரான ஒருவரது நோய் எதிர்ப்புச் சக்தி பலமாகி விடும் என்பதுதான் எதிர்பார்ப்பு.

தடுப்புமருந்து நோயின் கடுமையைத் தடுக்கும்

“நோய் எதிர்ப்புச் சக்தி என்பது கடுமையான நோயையும், மரணத்தையும் தடுத்து உங்களைப் பாதுகாக்கும். அது தொற்றிலிருந்து உங்களைக் காக்காமல் போய்விடலாம். இந்தத் தடுப்புமருந்துகள் உடலுக்குள் ஓர் அமைப்பியல் ரீதியிலான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும். வைரஸ் உடலுக்குள் நுழைந்தவுடன் அதை எதிர்த்துப் போராடும் வல்லமை கொண்டது இந்தச் சக்தி. ஆனால் உடலுக்குள் வைரஸ் நுழைவதை அதனால் தடுக்க முடியாது,” என்று விளக்கம் தந்தார் பொதுச் சுகாதார நிபுணர்.

“தடுப்புமருந்து சில நோயை உருவாக்கலாம். ஆனால் அது கடுமையாக இருக்காது. அது தொற்று விகிதத்தைக் குறைத்து விடும்,” என்று கருத்துரைத்தார் மருத்துவர் ரெட்டி.

நோய் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும்

கரோனா தடுப்பு மருந்தின் இரண்டு டோஸ்கள் பெற்றபின்பு நோய் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தற்போது சொல்வது கடினம் என்றார் மருத்துவர் ரெட்டி.

”ஆறு மாதம் நீடிக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். ஒரு வருடம் நீடிக்கும் என்று பிஃவிஷர் சொல்கிறது. அதற்குப் பின் மற்றுமொரு டோஸ் தேவைப்படும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்று சொன்னார் அவர். எதிர்காலத்தில் இந்த வைரஸ் எப்படி உருமாறும் என்பதையும் அவதானிக்க வேண்டும் என்று மேலும் அவர் கூறினார்.

வெளிநாட்டு தடுப்புமருந்துகளை வேகமாகக் கைக்கொள்ளுதல்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த தடுப்புமருந்து அமெரிக்காவிற்கு ஒரு நல்ல தீர்வாக இருந்திருக்கும். ஏனென்றால் அந்த மருந்தின் ஒற்றை டோஸை வைத்தே ஏராளமான மக்களுக்கு ஊசி போட்டிருந்திருக்க முடியும். ஆனால் அந்தத் தேசத்தில் ஏதோ ஒரு பிரச்சினையில் அது மாட்டிக் கொண்டுவிட்டது.

அவசரத்திற்குப் பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்தியல் ஆணையம் அனுமதித்திருக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வீ தடுப்புமருந்தைப் பற்றிப் பேச்சு எழுந்தபோது, மருத்துவர் ரெட்டி சொன்னது இது: தங்கள் தடுப்புமருந்து மிகவும் வலிமையானது என்றும், மற்ற தடுப்பு மருந்துகள் உண்டாக்குவது போன்ற ரத்த உறைவை அது ஏற்படுத்தாது என்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

“அமெரிக்கா தடுப்புமருந்துகளான பிஃவிஷர், மாடர்னா ஆகியவற்றைப் பொறுத்தவரை, இந்திய அரசாங்கம் அவற்றின் விலையைப் பேரம் பேச வேண்டும். அவற்றை நம் நாட்டில் எப்படி உற்பத்தி செய்யலாம் என்றும் பார்க்க வேண்டும்,” என்று முடித்தார் மருத்துவர் சிரிநாத் ரெட்டி.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.