ETV Bharat / bharat

காங்கிரஸ் ஆட்சியில் ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு; நிர்மலா சீதாராமன் - ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பாத மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

FM Nirmala Sitharaman
FM Nirmala Sitharaman
author img

By

Published : Jan 19, 2022, 1:47 AM IST

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(ஜன.18) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தில் ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. இந்த ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக செய்யப்பட்டது.

இதுகுறித்து நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி பதிலளிக்க வேண்டும். 2005ஆம் ஆண்டில், தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துடன் இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் உடன் எஸ்-பேண்ட் செயற்கைக்கோள் மூலம் மொபைல் பயனர்களுக்கு மல்டிமீடியா சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.

சொற்ப விலைக்கு ஏலம்

இதுதொடர்பான வழக்கில், 2011ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், தேசிய பாதுகாப்பு மற்றும் பிற சமூக நோக்கங்களுக்காக அரசாங்கத்திற்கு எஸ்-பேண்ட் செயற்கைக்கோள் தேவை என்றும், அத்துடன் ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஏலம் சொற்ப விலைக்கு விடப்பட்டிருப்பதாகவும் கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இதையடுத்து, ஜனவரி 17ஆம் தேதி ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தை கலைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த மோசடியில் இருந்து யாரும் தப்பித்துவிடக்கூடாது என்பதற்காக தேசிய பாதுகாப்புத்துறை நீதிமன்றத்தில் போராடுகிறது. நாங்களும் வரி செலுத்துவோரின் பணத்தை சேமிக்க போராடுகிறோம். இல்லையென்றால் ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் மோசடி அடுத்தக்கட்டத்திற்கு சென்றிருக்கும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மத்திய அரசு எந்தவித பாரபட்சமும் காட்டவில்லை...’ - நிர்மலா சீதாராமன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.