ETV Bharat / bharat

Jammu and Kashmir: மலர் பள்ளத்தாக்கு மற்றும் கலைஞர்களின் ஓவியக்காட்சி: குவியும் சுற்றுலாப் பயணிகள்! - காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மலர் பள்ளத்தாக்கு மற்றும் தால் ஏரி, பஹல்காம் பகுதி உள்ளிட்ட பல இடங்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் ஓவியக்கலைஞர்களை வேகுவாக ஈர்த்துள்ளது. பாட்னிடாப்பில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் பாட்னிடாப் மேம்பாட்டு ஆணையம் சார்பாக நூற்றுக்கணக்கான கண் கவர் மலர்கள் நட்டு வைத்து அழகியலுடன் காட்சி அளிக்கிறது. அதேபோல் தால் ஏரி அதன் இயற்கை அழகை ஓவியமாக்க கலைஞர்கள் பலர் அங்கு வருகை தந்துள்ளனர். இயற்கையின் இந்த கண்கொள்ளாத காட்சியை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 19, 2023, 4:01 PM IST

ஜம்மு & காஷ்மீர் : பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இடையே ராணுவத்தின் குண்டு முழக்கத்திற்கு இடையே உலகின் சொர்க்க பூமி ஒன்று இருக்கிறது என்றால் அது ஜம்மு காஷ்மீர்தான். காஷ்மீரை இரு வார்த்தைகளில் விளக்கலாம், அமைதி மற்றும் ஈர்ப்பு.

இந்த இரண்டும் காஷ்மீர் சென்றால் கிடைக்கும். பனி மூடிய மலைகள், நேர்த்தியான இயற்கை காட்சிகள், புல்வெளி, நீர்நிலைகள் என எங்கு திரும்பினாலும் மனம் ஆட்கொள்ளும் அழகான காட்சிகள்தான். காஷ்மீர் சுற்றுப்பயணம் என்பது பலரது வாழ்க்கையின் லட்சியமாக கூட இருக்கிறது. உலகின் மிக அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காஷ்மீர் முதன்மையானது என்றே கூறலாம்.

அது மட்டுமல்ல அங்கு கிடைக்கப்பெறும் கைவினைப்பொருட்கள் உலகில் வேறு எங்கும் கிடைக்காது. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த ஏராளமான பொருட்கள் அங்கு கிடைக்கும். லாவண்டர் மலர்களின் கோட்டையாக உள்ள காஷ்மீர்; பால் உற்பத்தி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டப் பல தொழில்துறைகளில் முன்னோடியாக விளங்குகிறது.

லடாக் சுற்றுப்பயணம் பைக் ரைடர்களின் முதன்மையான கனவு. இப்படி பல சிறப்புகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவம் தங்களிள் முழு நேரப்பாதுகாப்பை வழங்கி வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி அங்கு சென்றுவர முடியும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில்தான் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கத்தில் அம்மாநில அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.

பாட்னிடாப் மலர் பள்ளத்தாக்கு; அந்த வகையில், பாட்னிடாப் பகுதியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரின் உயரமான புல்வெளி பகுதியில் பாட்னிடாப் மேம்பாட்டு ஆணையம் சார்பாக வண்ணமயமான மலர் பள்ளத்தாக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தாக்கின் 12.50 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் நடப்பட்டன.

அதில் பெரும்பாலும் லாவண்டர் மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்கி வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் பலர் அந்த மலர் பள்ளத்தாக்கிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வரும் சுற்றுலாப் பயணிகள் மலர்களின் வண்ணமயமான காட்சிகளைக் கண்டு மெய் சிலிர்த்துப் போகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சி மிக்க தருணம்; அந்த வகையில் அங்கு வருகை தந்திருந்த மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சில சுற்றுலாப் பயணிகள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். அப்போது பேசிய சுற்றுலாப் பயணி பூனம் சவ்ஹான்.. "இந்த பகுதி மிகவும் அழகாக இருக்கிறது. வானிலை மற்றும் இந்த மலர் பள்ளத்தாக்கு மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. இந்த மலர் பள்ளத்தாக்கை காண எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து வருகை தந்துள்ளோம். எங்கள் குழந்தைகள் இங்கே தங்கள் நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிடுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி மருத்துவர் அனு, "நான் முதன் முதலாக பாட்னிடாப்பிற்கு வந்துள்ளேன். மலர் பள்ளத்தாக்கிற்கு வந்து இந்த மலர்களை பார்த்தபோது அனைத்தும் மிக அழகாக இருந்தது. இந்தக் காட்சி கண்களை கவர்கின்றன. மேலும் இங்கு ஒரு கோயிலும் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தை ஒப்பிடும்போது இங்கு காலநிலை மிகவும் நன்றாக உள்ளது" என்றார்.

தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி விகாஸ் பேசிய போது.." பாட்னிடாப் வந்த நாங்கள் இங்கே இரவு தங்கி இருந்தோம். யாரோ ஒருவர் கூறியதை அடுத்து இந்த மலர் பள்ளத்தாக்கை ரசிக்க வந்தோம். ஆனால் இங்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது" எனக்கூறினார்.

இதனைத் தொடர்ந்து பாட்னிடாப் மேம்பாட்டு ஆணையத்தின் செனானி பிளாக் தலைவர் பர்காஷ் சந்த் பேசுகையில், "இந்த மலர் பள்ளத்தாக்கை உருவாக்க தலைமை நிர்வாகி ஷேரா சிங் மிக கடுமையாக உழைத்துள்ளார். இதுவரை சுற்றுலாப் பயணிகள் கோயில் மற்றும் மலர்பள்ளத்தாக்கு பகுதிக்குச் செல்ல பாதை அமைக்கவும், தங்குவதற்கான வீடுகள் அமைக்கவும் மொத்தம் 20 லட்சம் ரூபாயுக்கு மேல் செலவளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து தங்கி தங்கள் நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிடலாம்'' எனக்கூறினார்.

தால் ஏரியில் கலைஞர்களின் கண்கவர் ஓவியங்கள்; அதேபோல், பள்ளத்தாக்கு, தால் ஏரி, பஹல்காம் போன்ற பகுதிகளை ஓவியங்களாக வரையவும், சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள் 40 பேர் கொண்ட குழு ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளது. 'வாடியன்' என்று பெயரிடப்பட்ட இந்த அமைப்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று காற்று மாசு, சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட பலவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள இந்த குழுவைச் சேர்ந்த ஓவியர்கள் பலர் அங்குள்ள இயற்கை அழகை கண்களால் பார்த்தபடியே ஓவியமாக வரையும் காட்சி பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து அங்கிருந்த கலைஞர்கள் பலர் தங்களது ஆர்வம் குறித்து விளக்கினர்; அப்போது பேசிய ஓவியக்கலைஞர் நிஷிகாந்த் பலாண்டே, "நாங்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்குச் செல்கிறோம், இயற்கை அழகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறோம். எங்கள் பிரசாரங்களில் ஒன்றிற்கு 'வாடியன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தாக்கு மற்றும் தால் ஏரி, பஹல்காம் போன்ற பல்வேறு இடங்களை வரைவதற்கு நாங்கள் இங்கு வந்தோம்" எனக்கூறினார்.

அவரைத் தொடர்ந்து ஓவியக்கலைஞர் பிஜய் பிஸ்வாலிடம் நீங்கள் ஏன் காஷ்மீரைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டதற்கு அவர்.."காஷ்மீர் பூமியின் சொர்க்கம் போன்றது. அது அனைவருக்கும் தெரியும். நிறைய இந்தியர்களுக்கு காஷ்மீரின் அழகு பற்றி தெரியாது. ஆனால், காஷ்மீருக்கு வந்தவுடன், காஷ்மீரின் அழகு எவ்வளவு அற்புதமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். பல அழகான இடங்கள் இங்கே உள்ளன. தால் ஏரி மிக அழகாக இருக்கும். அது நவீனமயமாக்கலால் தீண்டப்படாமல் முற்றிலும் இயற்கையோடு ஒத்திருக்கிறது. எனவே இந்த இயற்கையையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்பதால் அதை எங்கள் கலை மூலம் கொண்டாட விரும்புகிறோம்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கலைஞர் சிக்கந்தர் சிங், "இந்த ஆண்டு தால் ஏரியை புதிய கோணத்தில் வண்ணம் தீட்ட நாங்கள் இங்கு வந்துள்ளோம். இயற்கைக்காட்சி அழகாக இருக்கிறது, உண்மையில் இது கலைஞர்களின் சொர்க்கமாக உள்ளது. கலைஞர்கள் ஓவியம் வரைவதற்கு இது முற்றிலும் சிறந்த இடம்.

எங்கள் கலை மூலம் ஓவியம் வரைவதால், எதிர்கால சந்ததியினர் சூழலை மாற்றவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதன் இயல்பு மாறாமல் பாதுகாக்கவும் முடியும். காஷ்மீரின் அழகை ஆராய்வதே அனைவரின் கனவாக உள்ளது" எனக்கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா தலங்கள் ; உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தி வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பட்னிடாப் மேம்பாட்டு ஆணையத்தின் முழு முயற்சியில் பட்னிடாப் மலர் பள்ளத்தாக்கு உருவாக்கப்பட்டுள்ளது. பல்லுயிர் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்கள் தற்போது அம்மாநிலத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

இதையும் படிங்க: முன்னாள் காதலனை வீட்டுக்கு அழைத்து பாம்பை விட்டு கொலை செய்த காதலி.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.