ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தானே மண்டி பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் அதே மாவட்த்தின் மற்றொரு பகுதியான பீர் பஞ்சால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜூனியர் கட்டளை அலுவலர் மற்றும் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சம்பவ பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்றுவருகிறது. ஜம்மு காஷ்மீரின் இன்று பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் காவலர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஏற்கனவே இன்று (அக்.10) காலை அனந்த்நாக் மற்றும் பந்திபோரா உள்ளிட்ட மாவட்டங்களில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்.. இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. பாதுகாப்பு தீவிரம்!