ETV Bharat / bharat

சாலை விபத்தில் பலியான நபரை பார்க்கச் சென்ற 4 பேர் உடல் நசுங்கி பலி.. தெலங்கானாவில் நிகழ்ந்த கோர விபத்து!

Nalgonda Accident: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே இருவேறு விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 10:43 AM IST

நல்கொண்டா: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே இருவேறு விபத்துகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

பெத்தவுரா மண்டல் நிம்மநாயக்கா தாண்டாவைச் சேர்ந்த கேசவுலு (வயது 28). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மிரியாலகுடாவில் இருந்து பெத்தவூராவுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சைதுலு (55) என்ற பாதசாரி மீது மோதினார். நிடமனூர் வேம்பாடு அருகே நடந்த இந்த சம்பவத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த கேசவுலு குடும்பத்தினர் 7 பேர் மினி சரக்கு வாகனத்தில் இன்று(டிச.25) அதிகாலை சம்பவ இடத்திற்குப் புறப்பட்டனர். விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் டாடா ஏஸ் வாகனம் எண்ணெய் லோடு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி மீது அதிவேகமாக மோதியது.

இதையும் படிங்க: "எனக்கும் மல்யுத்த சம்மேளனத்திற்கும் இனி சம்பந்தம் இல்லை"...முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் பரபரப்பு பேட்டி!

இந்த கோர விபத்தில் ராமாவத் கன்யா (40), நாகராஜு(28), பாண்டியா (40), புஜ்ஜி (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து அறிந்த ஹாலியா காவல் நிலைய ஆய்வாளர் காந்தி நாயக், நிட்மனூர் எஸ்ஐ கோபால் ராவ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மிரியாலகுடா பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மூவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: "மரியாதை கொடுத்து மரியாதை பெற வேண்டும்" - இந்தி குறித்த தயாநிதி மாறனின் வைரல் வீடியோவுக்கு தேஜஸ்வி யாதவ் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.