ETV Bharat / bharat

கேரளாவைத் தொடர்ந்து மிரட்டும் ஜிகா வைரஸ்

திருவனந்தபுரம் அருகே உள்ள ஆனையரா பகுதியில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Zika virus
Zika virus
author img

By

Published : Jul 15, 2021, 3:44 PM IST

Updated : Jul 15, 2021, 3:54 PM IST

திருவனந்தபுரம் (கேரளா) : கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பிலிருந்து இந்தியா மெல்ல மீண்டுவரும் நிலையில், கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் தலைதூக்கியுள்ளது.

ஏற்கெனவே 23 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு பதிவான நிலையில், இன்று (ஜூலை 15) மேலும் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இவர்களில் இரண்டு பேர் ஆனையரா பகுதியைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள மூவர் குன்னுக்குழிபட்டோம், கிழக்கு கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறினார்.

கேரளாவில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பானது ஜூலை 9ஆம் தேதி பதிவானது. திருவனந்தபுரம் பகுதியில் மட்டும் 15க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்புப் பதிவானது.

இதையடுத்து கேரளாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிந்தியாவும் ஏர் இந்தியாவும் விற்பனைக்கு - சத்தீஸ்கர் முதலமைச்சர் விமர்சனம்

Last Updated : Jul 15, 2021, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.