ETV Bharat / bharat

பழங்குடியினர் பள்ளியில் இடைவிடாத மரணங்கள்: 2 மாதங்களில் 5 பேர் பலி - படேரு தலராசிங்கி ஆண்கள் ஆசிரமப் பள்ளி

ஆந்திராவில் உள்ள பழங்குடியினர் பள்ளியில் கடந்த இரண்டு மாதங்களில் 5 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழங்குடியினர் பள்ளியில் இடைவிடாத மரணங்கள்

author img

By

Published : Dec 28, 2022, 10:27 PM IST

ஆந்திரா: அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் இயங்கி வரும் பழங்குடியினர் நல ஆசிரமப் பள்ளியில் சிகிச்சை பெற்று வந்த மாணவிகள் பலத்த நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில், படேரு தலராசிங்கி ஆண்கள் ஆசிரமப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இரண்டு மாதங்களுக்குள் ஆசிரமப் பள்ளியில் உடல்நலக்குறைவால் 5 மாணவர்கள் உயிரிழந்தது குறித்து மாணவர் சங்கத் தலைவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். மாணவர்களின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் பதில் அளிக்கக் கோரி, உறவினர்கள் மற்றும் மாணவர் சங்கத் தலைவர்கள் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: புனேவில் 15 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.