வங்கதேசத்திற்கு 200 மெட்ரிக் திரவ மருத்துவ ஆக்சிஜனை, இந்திய ரயில்வே ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் அனுப்பிவைக்க தயாராகியுள்ளது.
இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் அண்டை நாட்டிற்கு இயக்கப்படுவது இதுவே முதல்முறை. சக்ரதர்பூர் பிரிவில் உள்ள டாடாவிலிருந்து 200 மெட்ரிக் திரவ மருத்துவ ஆக்சிஜனை வங்கதேசத்தில் உள்ள பெனாபோலுக்கு, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் கொண்டு செல்கிறது. 10 கன்டெய்னர் ரேக்கில் ஆக்சிஜன் திரவம் நிரப்பப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கிட, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 24, 2021 அன்று இந்திய ரயில்வேயால் இயக்கப்பட்டது. சுமார் 35,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் 15 மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசி!