சரண்: பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் குதைபாக் பகுதியில், பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்த கட்டடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டடத்தின் சுவர்கள் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்தது. பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரு பெண் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். சடலங்களை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.