ETV Bharat / bharat

அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றம்!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Fire
அகமதாபாத்
author img

By

Published : Jul 30, 2023, 12:32 PM IST

குஜராத்: குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் சாஹிபாக் பகுதியில் ராஜஸ்தான் மருத்துவமனை என்ற தனியார் பன்னோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பல மாடிக் கட்டடம் கொண்ட இந்த மருத்துவமனையில் அடித்தளத்தில் இன்று(ஜூலை 30) அதிகாலையில் திடீரென தீப்பிடித்தது. மருத்துவமனையின் அடித்தளத்தில் இருந்து புகை வருவதைக் கண்ட நோயாளிகள் அலறியடித்து கூச்சலிட்டனர்.

இதையடுத்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அடித்தளத்திலிருந்து கரும்புகை மருத்துவமனை முழுவதும் பரவத்தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மருத்துவமனையின் முதல் தளத்தில் இருந்த நோயாளிகளை முழுமையாக வெளியேற்றினர்.

பின்னர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 20 முதல் 25 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் நோயாளிகள் யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் எம்.டி.சம்பவத் கூறும்போது, "சாஹிபாக் பகுதியில் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ராஜஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நெருப்பைக் காட்டிலும் புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்துவிட்டது. இந்த கரும்புகையால் மருத்துவமனையின் பிற தளங்களில் உள்ள நோயாளிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனால், மருத்துவமனையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். ஐசியூவில் இருந்த சில நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த தீ விபத்து மருத்துவமனையில் அருகில் குடியிருக்கும் பொதுமக்களிடையே பீதியைக் கிளப்பியது. பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

அதேபோல், இன்று காலையில் டெல்லியில் உள்ள உத்யோக் நகரில் ஷூ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆலையின் மேல் தளத்தில் பற்றி தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மும்பை சாப்ரா ஹவுஸில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.