கொடவா இன மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள் என்று கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து தெரிவித்ததையடுத்து அவருக்கு எதிராக மடிகேரி கிராம காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கைப் பதியப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை மேற்குத் தொடர்ச்சி மலைகள் பாதுகாப்புக் குழுவின் தலைவர் ரவி குஷலப்பா தொடுத்துள்ளார். சித்தராமையாவின் கருத்து ஆயிரக்கணக்கான கொடவா மக்களைப் புண்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சித்தராமையா மன்னிப்பு கேட்டாலும் நாங்கள் அவரை மன்னிக்கமாட்டோம் என்றும் அவரது கருத்துக்கு எதிராகச் சட்டப்பூர்வமாக வழக்கைத் தொடருவோம் என ரவி குஷலப்பா குறிப்பிட்டுள்ளார்.
கொடவா இன மக்களைப் புண்படுத்தும்படி கருத்து கூறியதற்காக அவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153இன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... இந்தியா வீரர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டார்களா? ட்விட்டரில் பொங்கும் நெட்டிசன்கள்!