கர்நாடகா: கல்புகரி மாவட்டத்தில் உள்ளது கொப்பரா கிராமம். இங்கு சில நாள்களுக்கு முன் கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. கிராம மக்கள் ஒன்றிணைந்து கிரிக்கெட் விளையாடுவதற்கான பந்தை வாங்கியுள்ளனர்.
இதனையடுத்து பந்திற்கான பணத்தை அனைவரும் பகிர்ந்து வாங்கியுள்ளனர். நேற்று அஃப்சலபூர் சாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது பந்திற்காக வாக்குவாதம் ஆரம்பித்துள்ளது.
பின்னர் வாக்குவாதம் முற்றி இளைஞர்களும், பெண்களும் மரக்கட்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுள்ளனர். இந்தச் சண்டையில் பலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மூவர் படுகாயங்களுடன் கல்புகரி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இச்சம்பவம் கர்நாடக மாநிலம் தேவல் கங்காபூர் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'அல்லாஹூ அக்பர்' கூறிய மாணவிக்கு பரிசுத்தொகை: வலதுசாரி இயக்கம் புகார்