டெல்லி: ஃபைபர்நெட் ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து சந்திரபாபு நாயுடு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், சந்திரபாபு நாயுடு கைது நடவடிக்கை மேற்கொள்ள இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில், இன்று (நவ 9) இடைக்கால உத்தரவை நவம்பர் 30ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.
ஃபைபர்நெட் ஊழல் வழக்கில் கைது நடவடிக்கைக்குத் தடை கோரி ஆந்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகின்றனர்.
ஃபைபர்நெட் ஊழல் வழக்கு ஏற்கனவே ஆந்திர அரசு, சந்திரபாபு நாயுடு மீது தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கு அக்டோபர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின் நவம்பர் 9ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (நவ.9) நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம் திரிவேதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய வழக்கு, தீபாவளி விடுமுறைக்குப் பிறகு உத்தரவு பிறப்பிக்கவும். அதன் பின் ஃபைபர்நெட் ஊழல் வழக்கை விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆந்திர அரசு தரப்பில், ஃபைபர்நெட் ஊழல் வழக்கில் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் உயர் நீதிமன்றம் நான்கு வாரம் சந்திரபாபு நாயுடுவிற்கு ஜாமீன் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், ஃபைபர்நெட் ஊழல் தொடர்பான வழக்கில் ஆந்திர மாநில அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதைப் பதிவு செய்து கொண்டு வழக்கு விசாரணை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு விசாரணை- உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!