ETV Bharat / bharat

ஒன்றரை ஆண்டுகள் வீட்டுக்குள் முடங்கிய குடும்பம்! - வீட்டுக்குள் முடங்கிய குடும்பம்

கோவிட் பெருந்தொற்று பயம் காரணமாக குடும்பம் ஒன்று ஒன்றரை ஆண்டுகள் ஒரே வீட்டுக்குள் முடங்கி கிடந்த சம்பவம் தன்னார்வலர் ஒருவரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Fearing COVID
Fearing COVID
author img

By

Published : Jul 22, 2021, 1:25 PM IST

கிழக்கு கோதாவரி : ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கடலி (Kadali) என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் ருத்தம்மா (50), கந்தமணி (32) மற்றும் ராணி (30) ஆகியோர் கடந்த 15 மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிகிடந்துள்ளனர்.

கோவிட் பயம் காரணமாக இவர்கள் வெளியே வரவே இல்லை. இந்த விவகாரம் தன்னார்வலர் ஒருவரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்மந்தப்பட்ட தன்னார்வலர் அரசின் நலத்திட்ட உதவியை அளிக்க கடலி கிராமத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது இது அவருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த தன்னார்வலர் இது குறித்து கிராமத் தலைவர் மற்றும் அலுவலர்களுக்கு தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து கிராமத் தலைவர் குருநாத் கூறுகையில், “சுட்டுகல்லா பென்னி, அவரது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இங்கு வசித்துவருகின்றனர்.

இவர்கள் கடந்த 15 மாதங்களாக கோவிட் பெருந்தொற்று பயம் காரணமாக வீட்டை பூட்டிக் கொண்டு இருந்துள்ளனர். வீடு பூட்டிக் கிடந்ததால் அங்கு செல்லும் சுகாதார அலுவலர்கள், வீட்டுக்குள் யாரும் இல்லையென திரும்பி வந்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட நபர்களின் உறவினர் ஒருவரும் இது தொடர்பாக புகார் அளித்தார். அவர்கள் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார். நாங்கள் சுகாதார அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு தகவல் கொடுத்தோம். தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது” என்றார்.

மேலும், “கோவிட் பெருந்தொற்று காரணமாக இந்தக் குடும்பத்தினர் ஒரு சிறிய கூடாரத்துக்குள் முடங்கியுள்ளனர். தற்போது கிராம மக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவருகிறோம்” என்று சுகாதார அலுவலர்கள் கூறினார்கள்.

இதையும் படிங்க : கோவிட் மூன்றாம் அலையை எப்படி சமாளிப்பது?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.