உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் பாலிபூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர பகதூர் சிங் (50.) இவரது மகன் அபய் பிரதாப் சிங் (22). இவருக்கும் இவர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று (நவ.2) ரஞ்சித் சிங், அவரின் சகோதரர் பிபின் சிங்குக்கு சொந்தமான டிராக்டரை அவரின் பக்கத்து வீட்டாரான ராஜேந்திர பகதூர் சிங்குக்கு சொந்தமான வீட்டின் மின்கம்பியில் இணைத்து ஓட்டியுள்ளார். இதற்கிடையே, இணைக்கப்பட்ட மின்கம்பி அறுந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் சிங், பிபின் சிங் ஆகியோர் ராஜேந்திர பகதூர் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதால், ராஜேந்திர பகதூர் சிங்கை நோக்கி ரஞ்சித் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதனை ரஞ்சின் சிங்கின் மகன் அபே பிரதாப் தடுக்க முயன்றுள்ளார். அவரையும் ராஜேந்திர பகதூர் சிங் சுட்டுள்ளார். சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சத்தம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் ரஞ்சித் சிங், அவரின் சகோதரர் பிபின் சிங் தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் இருவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தேடிவருகின்றனர்.