பாட்னா: பிகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள ரெங்கனியாபாக் பகுதியைச் சேர்ந்த ரிஷி தேவ் பிரசாத் என்பவர், தனது 21 வயது மகளை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
மகளின் காதல் விவகாரம் தொடர்பான வாக்குவாதத்தின் போது இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. மகளை துப்பாக்கியால் சுட்ட தந்தை, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உடலில் ஐந்து குண்டுகள் பாய்ந்த நிலையில், இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரிஷி தேவ், தற்செயலாக மகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.