ETV Bharat / bharat

விவசாயிகள் போராட்டம் குறித்து அமெரிக்கா கருத்து: வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்பு! - வெளியுறவுத்துறை அமைச்சகம்

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் குறித்த அமெரிக்காவின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகம்
வெளியுறவுத்துறை அமைச்சகம்
author img

By

Published : Feb 4, 2021, 9:50 PM IST

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியின் எல்லை பகுதிகளில் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். சர்வதேச அளவில் இப்பிரச்னை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் குறித்த அமெரிக்காவின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இது குறித்து மேலும் கூறுகையில், "அமெரிக்காவின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கப்படும். எந்த நோக்கத்தில் கருத்து தெரிவிக்கப்படுகிறதோ அதனை அப்படியே முழுமையாக ஏற்று கொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.

வேளாண்துறையில் இந்தியா மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களை அமெரிக்கா ஒப்புக்கொள்கிறது. இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள், அரசியல்சூழல், பிரச்னையை தீர்க்க அரசு மற்றும் சம்பந்தப்பட்ட விவசாய குழுக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இம்மாதிரியான போராட்டங்களின் நோக்கங்களைப் பார்க்க வேண்டும்.

ஒரே மாதிரியான விழுமியங்களை பகிர்ந்து கொள்ளும் இந்தியா, அமெரிக்கா ஆகியவை வலிமையான ஜனநாயக நாடுகள் ஆகும். ஜனவரி 26ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களும், ஜனவரி 6ஆம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களும் ஒரே மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவற்றை, அந்தந்த நாட்டின் சட்டங்களை கொண்டே தீர்க்க வேண்டும்.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் இணைய வசதி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவும் வன்முறையை கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டவை" என்றார். பாகிஸ்தான் குறித்து பேசிய அவர், "பயங்கரவாதம், பகைமை, வன்முறை இல்லா சூழலில், பாகிஸ்தானுடன் இயல்பான அண்டை நாட்டு உறவை பேணவே இந்தியா விரும்புகிறது. அம்மாதிரியான சூழலை உருவாக்குவது பாகிஸ்தானின் பொறுப்பு" என்றார்.

இந்திய, சீன எல்லை பகுதியின் மேற்கு பகுதியில் ராணுவப் படைகளைத் திரும்ப பெற இரு நாடுகள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அடுத்த கட்ட ராணுவ அலுவலர்களின் உயர் மட்ட பேச்சுவார்த்தை முன்னதாகவே நடத்தபடும் எனவும் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.