அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரஸில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜான்டியாலா என்ற பகுதியில் கார் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்தக் காரை பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜன் சிங் ஓட்டிவந்துள்ளார்.
இந்தநிலையில் அங்கிருந்தவர்கள் தில்ஜன் சிங்கை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்கள்.
இந்த விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பாடகர் தில்ஜன் சிங், ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள தனது புதிய பாடல் தொகுப்பு பணிகளை முடிக்க காரில் சென்றுள்ளார்.
தில்ஜன் சிங் மறைவு இசைத் துறையினருக்கு ஒரு பேரிழப்பாகும். இவரின் மறைவுக்கு, சூஃபி பாடகர் லக்விந்தர் வடாலி மற்றும் பல முக்கிய பாடகர்கள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.