ETV Bharat / bharat

Sundar naidu: சுந்தர் நாயுடு காலமானார்! - சுந்தர் நாயுடு காலமானார்

ஆந்திராவின் முன்னணி தொழில் அதிபர் உப்பளப்பட்டி சுந்தர் நாயுடு காலமானார்.

Sundar naidu
Sundar naidu
author img

By

Published : Apr 28, 2022, 7:36 PM IST

ஹைதராபாத்: பாலாஜி ஹேச்சரிஸ் (Balaji Hatcheries) நிறுவனத்தின் தலைவர் தொழிலதிபர் சுந்தர் நாயுடு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை (ஏப்.28) காலமானார்.

இளமை வாழ்க்கை: ஆரம்ப காலங்களில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய சுந்தர் நாயுடு பின்னாள்களில் ஆந்திராவின் முன்னணி தொழிலதிபராக உயர்ந்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் தவனம்பல்லே தாலுகாவில் உள்ள கம்பலபல்லே என்ற கிராமத்தில் 1936ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி கோவிந்து நாயுடு-மங்கம் மாலா இணையருக்கு மகனாக பிறந்தார்.

Sundar naidu: சுந்தர் நாயுடு காலமானார்!

இந்தத் தம்பதியருக்கு சுந்தர் நாயுடுவுடன் சேர்த்து மொத்தம் 5 குழந்தைகள். சுந்தர் நாயுடு தனது ஆரம்ப கல்வியை டி.புத்தூர் பள்ளியிலும், உயர் கல்வியை அரகோண்டா இசட்பி பள்ளியிலும், கல்லூரியை திருப்பதி எஸ்.வி., கலைக் கல்லூரியிலும் முடித்தார்.

கால்நடை மருத்துவர் பணி: தொடர்ந்து பாம்பே கால்நடை பல்கலைக்கழகத்தில் (பிவிஎஸ்சி) கால்நடை மருத்துவப் படிப்பை முடித்தார். இதையடுத்து, சித்தூரில் கால்நடை மருத்துவராக தனது பணியை தொடர்ந்தார். இந்த நிலையில், 1964ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பெம்மசானி சுஜேவானா என்ற பெண்ணை மணந்தார். இவர் சித்தூர், அனந்த்ப்பூர் மற்றும் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்தார்.

இந்த பணியை 1967இல் உதறிவிட்டு கோழிப் பண்ணை தொடங்கினார். மேலும், கோழி வளர்ப்பு குறித்து கிராம மக்களுக்கு எடுத்துரைத்தார். கோழி வளர்ப்பில் உள்ள சவால்கள் மற்றும் கோழி பராமரிப்பு, மருத்துவம் உள்ளிட்ட விவகாரங்களிலும் கிராம மக்களுக்கு உதவி செய்தார்.

கௌரவங்கள்: பின்னாள்களில் மிகப்பெரிய தொழில் முனைவோராக உருவெடுத்த சுந்தர் நாயுடு கோழி வளர்ப்புத் துறையில் தனது பங்களிப்பிற்காக பல அரிய விருதுகளைப் பெற்றுள்ளார். சுந்தர் நாயுடு, டாக்டர் பி.வி. ராவ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புனேவின் நிறுவன அறங்காவலராக செயல்பட்டார்.

அவர் 'நெக்' இன் வாழ்நாள் அழைப்பாளர் உறுப்பினராகவும், ஆந்திராவின் கோழி வளர்ப்பு கூட்டமைப்பின் நிரந்தர அழைப்பாளர் உறுப்பினராகவும், சர்வதேச கோழி அறிவியல் சங்கத்தின் உறுப்பினராகவும், முட்டை கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், இவருக்கு நியூஜெர்சி அரசு சுந்தர் நாயுடுவுக்கு 'தென்னிந்தியாவில் கோழி வளர்ப்பவர்' விருது வழங்கி கவுரவித்தது.

இதையும் படிங்க : பிரபல பாலிவுட் நடிகர் ஷிவ் சுப்பிரமணியம் காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.