ETV Bharat / bharat

1000 படங்களில் நடித்த காமெடி நடிகர் முகமது அலிக்கு ஜக்தல்பூரில் உற்சாக வரவேற்பு.. - ஒடிசா

Comedian actor ali: பிரபல நகைச்சுவை நடிகர் முகமது அலி, ஒடிசாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ள நிலையில், நாளை (ஜனவரி 16) தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தை அடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அலி
நடிகர் அலி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 10:36 PM IST

ஜக்தல்பூர்: பிரபல நகைச்சுவை நடிகர்களில் முக்கிய நடிகராக வலம் வருபவர் முகமது அலி. நகைச்சுவை நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான இவர் தெலுங்கு, தமிழ் என சுமார் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அலிமா என்ற தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளரானார்.

குறிப்பாக ஈடிவியின் பிரபலமான பேச்சு நிகழ்ச்சியான அலிதோ சரடகாவின் தொகுப்பாளராகவும் இருந்தள்ளார். தற்போது 6க்கும் மேற்பட்ட ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் தோழா திரைப்படம், விஜய் தேவர்கோடா, சமந்தா நடிப்பில் வெளியான குஷி போன்ற திரைப்படத்தின் மூலம் இவரை அறியலாம்.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் அலி ஒடிசா மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். ஒடிசாவுக்குச் செல்லும் வழியில் சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூர் விமான நிலையத்தை அடைந்தார். அப்போது அவரது ரசிகர்கள் அவரை மேளதாளத்துடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து இன்று இரவு ஒடிசாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இவர் அதனை முடித்துவிட்டு நாளை தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தை வந்தடைவார்.

மேலும், இவர் 1981 மற்றும் 1996ஆம் ஆண்டு என இரண்டு நந்தி விருதைப் பெற்றுள்ளார். அதேபோல் 2003 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் பிலிம் ஃபேர் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொங்கல் விருந்து - வேட்டையன் போஸ்டர் வெளியிட்ட படக்குழு! தலைவர்-170 அதிரடி அப்டேட்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.