கர்நாடகா மாநிலம் யாத்கிர் மாவட்டம் சாகாபூரில் உள்ள பண்ணை குட்டை ஒன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலையடுத்து அங்குவிரைந்த காவல்துறையினர், 6 பேரின் உடல்களையும் மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட தகவலில், உயிரிழந்தவர்கள் பீமராயா சூரபுரா(45), சாந்தம்மா(36) அவர்களது குழந்தைகள் சுமித்ரா(13) ஸ்ரீதேவி(12), சிவராஜ்(9), லட்சுமி(8) என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர், பீமராயா குடும்பத்தினருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இளைஞருடன் மாயமான மாணவி: பெற்றோரின் தீக்குளிப்பு அறிவிப்பால் காவலர்கள் குவிப்பு