ETV Bharat / bharat

கும்பமேளாவில் கரோனா சோதனை செய்த ஆய்வகங்களில் திடீர் ரெய்டு: வெளியான திடுக்கிடும் தகவல் - கும்பமேளாவுக்காக போலி கரோனா பரிசோதனை

ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில் போலியாக கரோனா பரிசோதனை நடத்திய ஐந்து ஆய்வகங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. இச்சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கும்பமேளாவில் கரோனா பரிசோதனை
கும்பமேளாவில் கரோனா பரிசோதனை
author img

By

Published : Aug 7, 2021, 11:13 AM IST

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில், போலியாக கரோனா பரிசோதனை நடத்திய வழக்கு விசாரணை தொடர்பாக ஐந்து நகரங்களில் உள்ள நோவஸ் பாத் லேப்ஸ், டிஎன்ஏ லேப்ஸ், மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ், டாக்டர் லால் சந்தனி லேப்ஸ் உள்ளிட்ட ஐந்து ஆய்வகங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது.

இந்த ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட போலியான கரோனா பரிசோதனைகள் மூலம் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 0.18 விழுக்காடாக காட்டப்பட்டது. உண்மையில் அப்போதைய கரோனா நிலவரம் 5.3 விழுக்காடாக இருந்தது.

இந்தச் சோதனையில் சொத்து தொடர்பான ஆவணங்கள், போலி கட்டண ரசீதுகள், மடிக்கணினிகள், செல்போன்கள், 30 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை அமலாக்க இயக்குநரகம் கைப்பற்றியது. இந்த வழக்கு தொடர்பான சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமலாக்க இயக்குநரகம் தெரிவித்தது.

இந்தக் குற்றச்செயல் ஒரே ஒரு தொலைபேசி எண், முகவரியை வைத்து மேற்கொள்ளப்பட்டதாகவும், ஹரித்வாருக்கே செல்லாத நபர்களின் பெயர்களில் சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. உத்தரகாண்ட் காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பணமோசடி தொடர்பான விசாரணை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.

கும்பமேளாவின்போது கரோனா பரிசோதனை செய்ய சோதனை நடத்தப்பட்ட ஆய்வகங்களுடன் உத்தரகாண்ட் அரசு ஒப்பந்தம் போட்டதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்தது. இதற்கு அரசு 3.4 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் சட்டவிரோதமாக லாபம் ஈட்டும் முயற்சியில் இந்த ஆய்வகங்கள், ஆர்டி-பிசிஆர், ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் போலியாக கரோனா பரிசோதனை செய்து போலி ரசீதுகளைத் தயாரித்துள்ளன.

இதையும் படிங்க: விஸ்மயா கணவர் டிஸ்மிஸ்- கேரள அரசு அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.