டெல்லி: இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் பெயரில் @BsfIndia0 என்ற போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கப்பட்டிருந்தது. இது எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கைப் போல (@BSF_India) இருந்தது.
இந்த கணக்கு போலியானது என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த போலி கணக்கை உடனடியாக நீக்கும்படி, ட்விட்டர் நிர்வாகத்திற்கு எல்லைப் பாதுகாப்புப் படை தரப்பில் கடிதம் எழுதப்பட்டது. இதையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படையின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி ட்விட்டர் கணக்கை நீக்கி ட்விட்டர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இந்த போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நீக்கப்பட்டுள்ளது.