ETV Bharat / bharat

2019ல் அரசியல் கட்சியாக பதிவு - 2023ல் மிசோரமில் ஆட்சி - யார் இந்த சோரம் மக்கள் இயக்கம்? - மிசோரம் ஆட்சியைப் பிடித்த சோரம் மக்கள் இயக்கம்

Who is Zoram People's Movement: 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலி அரசியல் பிரவேசம் எடுத்து 8 தொகுதிகளை கைப்பற்றிய சோரம் மக்கள் இயக்கம், தற்போது 2023ல் 27 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை அமைக்கிறது. 4 ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றியது எப்படி? யார் இந்த சோரம் மக்கள் இயக்கம் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

explained-zpm-pulls-off-stunner-in-mizoram-thanks-to-anti-incumbency-and-local-issues
2019ல் அரசியல் கட்சியாக பதிவு: 2023ல் மிசோரமில் ஆட்சி - யார் இந்த சோரம் மக்கள் இயக்கம்?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 10:09 PM IST

ஐஸ்வால் (மிசோரம்): மிசோரம் மாநிலத்தில் ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி சோரம் மக்கள் இயக்கம் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

இந்தியத் தேர்தல் ஆணையம் டிசம்பர் 4ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 தொகுதிகளைக் கைப்பற்றவேண்டும்.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணியை விட சோரம் மக்கள் இயக்கம் முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில் தற்போது, மிசோரம் மாநிலத்தின் 40 தொகுதிகளிலும் தேர்தல் முடிவுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி சோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களையும், மிசோ தேசிய முன்னணி 10 இடங்களையும், பாஜக 2 இடங்களையும், காங்கிரஸ் 1 இடத்தையும் கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் மிசோரம் மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் சோரம் மக்கள் இயக்கம் ஆட்சி அமைக்க உள்ளது.

சோரம் மக்கள் இயக்கம் மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்துஹோமாவினால் உருவாக்கப்பட்டது. மிசோரம் மக்கள் மாநாடு, சோரம் தேசியவாதக் கட்சி, சோரம் எக்ஸோடஸ் இயக்கம், சோரம் அதிகாரப் பரவலாக்கல் முன்னணி, சோரம் சீர்திருத்த முன்னணி மற்றும் மிசோரம் மக்கள் கட்சி என ஆகிய ஆறு அமைப்புகள் ஒன்று இணைத்து சோரம் மக்கள் இயக்கக் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதன் பின் ஒருங்கிணைந்த அமைப்பாக மாறியது.

சோரம் மக்கள் இயக்கத்தின் நோக்கம்: மிசோரம் மாநிலத்தில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அதற்கான முன்னெடுப்புகளைச் செய்வதை நோக்கமாக கொண்டு இந்த கட்சி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2018ல் அதிகாரப்பூர்வமாக சோரம் மக்கள் இயக்கம் (ZPM) உருவாகியது.

இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் மது விலக்கை அமல்படுத்துவதை முன்னெடுத்து 36 இடங்களில் சோரம் மக்கள் இயக்கம் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு: 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வ கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, மிசோரம் மக்கள் மாநாட்டுக் கட்சி சோரம் மக்கள் இயக்கத்திலிருந்து வெளியேற்றம் செய்தது.

மிசோரம் ஆட்சியைப் பிடித்த சோரம் மக்கள் இயக்கம்: 2023ஆம் ஆண்டு மிசோரம் மாநிலத்திலுள்ள 40 இடங்களிலும் சோரம் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் சோரம் மக்கள் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 4) இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு எண்ணிக்கையில் தனிப் பெரும்பான்மையுடன் சோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிங்க: மிசோரமில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சோரம் மக்கள் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.