ETV Bharat / bharat

JEE , NEET மற்றும் CUET தேர்வுகளை ஒன்றிணைக்க ஆலோசனை என யுஜிசி தலைவர் பிரத்யேகப்பேட்டி - யுஜிசி தலைவர் எம் ஜெகதீஷ் குமார் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டி

யுஜிசி தலைவர் எம் ஜெகதீஷ்குமார் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் உயர்நிலைப் படிப்புகளுக்கு வைக்கப்படும் மூன்று முக்கியமான நுழைவுத்தேர்வுகளை ஒன்றிணைத்து ஒரே தேர்வாக நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறினார்.

Etv BharatJEE , NEET மற்றும் CUET தேர்வுகளை ஒன்றிணைக்க ஆலோசனை - யுஜிசி தலைவர் பிரத்யேக பேட்டி

author img

By

Published : Aug 14, 2022, 8:00 PM IST

டெல்லி: இந்தியாவில் தொழிற்துறை படிப்புகளுக்காக வைக்கப்படும் JEE , NEET மற்றும் CUET ஆகிய தேர்வுகளை பல்கலைக்கழக மானியக்குழு நடத்தி வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் இந்த மூன்று முக்கியமான நுழைவுத் தேர்வுகளையும் இணைத்து பொதுப்பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET - The Common University Entrance Test ) என நடத்த உள்ளது.

தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே, இந்த நுழைவுத் தேர்வுக்கு 1 மில்லியனுக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து உள்ளனர். இப்போது பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியையும் ஒரே வரம்பிற்குள் கொண்டு வர முடியுமா என்று நிபுணர்கள் யோசித்து வருகின்றனர். புதிய கொள்கையை உருவாக்க நிபுணர் குழு விரைவில் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் யுஜிசி தலைவர் எம். ஜெகதீஷ் குமார் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேகப்பேட்டியில், ‘மூன்று வெவ்வேறு தேர்வுகளை ஒரே தேர்வின்கீழ் கொண்டு வந்தால், தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தேர்வுகளை இன்னும் திறமையாக நடத்த முடியும். மாணவர்கள் ஒரே தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் படிப்பை தேர்வு செய்யலாம். அதனால் தான் இந்த புதிய கொள்கையைக் கொண்டு வர உள்ளோம். இந்த யோசனையை சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் விவாதித்து ஒருமித்த கருத்தை எடுக்க ஒரு குழு அமைக்கப்படும்’ எனக் கூறினார்.

மேலும் ஈடிவி பாரத்தின் கேள்விகளுக்கு ஜெகதீஷ் குமார் பதிலளித்தார்.

ஈடிவி பாரத்: வருங்காலத்தில் தேர்வில் வரக்கூடிய மாற்று நடவடிக்கைகள் என்னென்ன?

ஜெகதீஷ் குமார்: தற்போது நீட் தேர்வில் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் தேர்வு எழுதுகின்றனர். ஜேஇஇ மாணவர்கள் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் தேர்வு எழுதுகிறார்கள். CUET பொதுத் தேர்வானது இந்த பாடங்களுடன் 61 வெவ்வேறான பாடங்களையும் உள்ளடக்கியுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுபாடத்திட்டத்தின் அடிப்படையில் (NCERT) பல்கலைக்கழக பொதுத்தேர்வு மட்டும் நடத்தினால் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும் என்று நினைக்கிறோம். இது முடிந்ததும், நீட் தேர்வில் சேர்க்கை வழங்கும் கல்வி நிறுவனங்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மட்டுமே எடுத்து அவர்களுக்கு இடங்களை ஒதுக்கும்.

அதேபோல், பொறியியல் படிப்புகளுக்கு, கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மட்டுமே கல்லூரிகள் கருத்தில் கொள்ளும். பொறியியல் மற்றும் மருத்துவத்தில் சீட் கிடைக்காத மாணவர்கள், அதே நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணுடன் மற்ற பொதுப் பல்கலைக் கழகங்களில் தாங்கள் விரும்பும் படிப்புகளில் சேரலாம்.

ஈடிவி பாரத்: தேர்வுகளை இணைக்கும் யோசனை எப்படி வந்தது?

ஜெகதீஷ் குமார்: CUET அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நீட் மற்றும் ஜேஇஇ மெயின் ஆகிய தேர்வுகளை சேர்த்து நாட்டில் மூன்று முக்கியமான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களில் பெரும்பாலானோர் இந்த மூன்று தேர்வையும் எழுதுகிறார்கள். அப்போதுதான் ஒரு மாணவன் மூன்று தேர்வுகளையும் எழுத வேண்டிய அவசியம் என்ன என்ற எண்ணம் வந்தது.

ஈடிவி பாரத்: இந்த இணைப்பின் மூலம் என்ன பயன்?

ஜெகதீஷ் குமார்: மாணவர்கள் பல தேர்வுகளில் எழுதும் அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஒரு தேர்வில் மட்டும் கவனம் செலுத்த முடியும். மேலும் 12ஆம் வகுப்பில் அனைத்துப் பாடத்திலும் முழு கவனம் செலுத்த முடியும். இந்த தேர்வுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன. நான்கு வகையான பதில்களில் பொருத்தமான பதில்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சில கேள்விகள் மாணவர்களின் நினைவாற்றலைச் சோதிக்கும் விதமாகவும், மற்ற சில கேள்விகள் கொடுக்கப்பட்ட பதில்களில் ஒன்றைத்தேர்ந்தெடுத்து அவர்களின் பகுப்பாய்வு ஆற்றலைச்சோதிக்கும் விதமாகவும் உள்ளது. சில கேள்விகள் எளிமையான கருத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் உள்ளது. இந்த பொது தேர்வின் மூலம் மாணவர்கள் எளிதாக தேர்வு எழுத முடியும்.

ஈடிவி பாரத்: வழக்கமான மத்திய பல்கலைக்கழகத் தேர்வுகளுடன் ஒப்பிடும்போது NEET மற்றும் JEE கடினமானது இல்லையா?

ஜெகதீஷ் குமார்: 12ஆம் வகுப்பில் படித்ததை வைத்து மாணவர்களின் திறமையைச்சோதிக்க வேண்டும். அதை விடுத்து, உயர்தரம் என்ற பெயரில், குழந்தைகளுக்கு தெரியாததை கேட்கக்கூடாது. நுழைவுத் தேர்வில் இருப்பதைப் புரிந்துகொள்ள பயிற்சி மையங்களுக்கு செல்ல வைக்கக்கூடாது. கேள்விகள் வேறு மாதிரி கேட்கப்பட்டால் அங்கு பயிற்சிக்கான தேவை அதிகரிக்கும். குழந்தைகள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுவது நல்லதல்ல. CUET பொதுத்தேர்வின் வினாத்தாள் மாணவர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. 12ஆம் வகுப்பில் அவர்கள் படித்தவற்றின் அடிப்படையில் கேள்விகள் இருக்கும். நுழைவுத்தேர்வுகள் அப்படியே இருக்க வேண்டும்.

ஈடிவி பாரத் : நுழைவுத்தேர்வுகளுக்கான கூட்டு ஆய்வுக் குழு எப்போது அமைக்கப்படும்?

ஜெகதீஷ் குமார்: இன்னும் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களில் ஒரு குழு அமைக்கலாம். இது ஆறு மாதங்களில் சம்பந்தப்பட்ட கூட்டாளர்களுடன் கலந்தாலோசிக்கும். இது ஒரு ஒருங்கிணைந்த பல்கலைக்கழக பொதுத்தேர்வு குறித்த சாத்தியக்கூறுகள் மூலம் இது குறித்து ஆலோசிக்கும். பின்னர், இது குறித்து பங்குதாரர்களின் பரிந்துரைகளின் கருத்து கேட்கப்படும். அவர்களின் கருத்து அடிப்படையில் பரிந்துரை இறுதி செய்யப்படும்.

ஈடிவி பாரத்: தற்போது NEET மற்றும் JEE தேர்வுகளில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. பல்கலைக்கழக பொதுத்தேர்விலும் தரவரிசைப் பட்டியல் அறிவிக்கப்படுமா?

ஜெகதீஷ் குமார்: அந்த விஷயத்தை கமிட்டி முடிவு செய்யும். ஆனால் சிலர் மூன்று விதமான தேர்வுகளை எழுதும் போது, ​​நமக்கு வாய்ப்புகள் அதிகம், இல்லையா? இதையே செய்தால் குறையுமா என்ற சந்தேகத்தில் உள்ளனர். அவற்றை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் ஆண்டுக்கு இருமுறை CUET நடத்த திட்டமிட்டுள்ளோம். மே மற்றும் டிசம்பரில் இரண்டு முறை தேர்வு நடத்தப்படும். இதன் மூலம் ஒருமுறை இல்லையென்றால், மற்றொரு வாய்ப்பைப்பெற முடியும்.

ஈடிவி பாரத்: எந்த ஆண்டுக்குள் மாற்றத்தை செயல்படுத்த உத்தேசித்துள்ளீர்கள்?

ஜெகதீஷ் குமார்: முடிந்தால் அடுத்த ஆண்டு இதை நடைமுறைப்படுத்த இலக்கு வைத்துள்ளோம். இல்லை என்றால் 2024-25ஆம் ஆண்டிலேயே கொண்டு வருவோம். இதுபோன்ற முடிவுகளை அவசரப்பட்டு எடுக்கக்கூடாது. அனைத்துக் கோணங்களிலும் சிந்தித்து அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளையும் பெற்று முடிவு எடுக்க உள்ளோம். அதனால்தான் இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இதையும் படிங்க:ஐஎஃப்எஸ் அலுவலர் வான்கடே பிறப்பால் பட்டியல் இனத்தைச்சேர்ந்தவர் என சாதி ஆய்வுக்குழு தகவல்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.