டெல்லி: சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா இன்று காலை அவரது இல்லத்தில் காலமானார்.
காலை 4 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக சிபிஐ நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஞ்சித் சின்ஹா 1974 ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். காவல்துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர். 2012 முதல் 2014ஆம் ஆண்டு வரி அவர் சிபிஐ இயக்குநராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கான சரியான காரணம் தெரியவில்லை.