மேற்குவங்க மாநிலம் இந்திய-வங்கதேச எல்லையில் அரசு அலுவலர்களின் உதவியோடு கால்நடைகள் கடத்தப்படுவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி விசாரணை மேற்கொண்டதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கமாண்டர் குமார் உள்ளிட்ட மூன்று அரசு அலுவலர்கள் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து செப்டம்பர் 21ஆம் தேதி குமார் மீது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
நாளை (நவ.18) அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.